மும்பை அணியை விட்டு வெளியேறுகிறாரா சச்சின்.. உண்மை என்ன..?

ஐ.பி.எல் அறிமுகமான காலத்தில் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கரை அவரது சொந்த ஊரான மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. அங்கிருந்து அவர் வேறு எந்த அணியிலும் சேரவில்லை. வீரராக ஓய்வுப் பெற்ற பிறகு கூட அங்கேயே ஆலோசகராக பணியாற்றி வந்தார். இன்று அந்தப் பதவியில் இருந்தும் விலகியுள்ளார் என செய்திகள் பரவி வருகின்றது.

- Advertisement -

கடந்த சில நாட்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் பல்வேறு சிக்கல்கள் போய்க் கொண்டிருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அணிக்குள் வளைத்துப் போட்டது மும்பை இந்தியன்ஸ். இங்கு தான் பிரச்சனையின் துவக்கப் புள்ளி.

- Advertisement -

மீண்டும் மும்பைக்கு திரும்பும் பட்சத்தில் கேப்டன் பதவி வேண்டும் என ஹர்திக் பாண்டியா கண்டிசன் போட மும்பை அணியும் ரோஹித் சர்மாவிடம் கூறி அவரைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஹர்திக்கை புதியக் கேப்டனாக அறிவித்தது. ஐந்து முறை கோப்பைகள் வாங்கித் தந்த ஒருவரிடம் கேப்டன் பதவியை பரித்தியது மிகவும் தவறு என ரசிகர்கள் ஒருபக்கம் கொந்தலிக்கின்றனர்.

- Advertisement -

மறுபக்கம் ரோஹித் சர்மாவுக்கு பிறகு மும்பை அணியின் கேப்டனாக முன்னேறுவோம் என நினைத்து ஏமாந்த சூரியகுமார் யாதவ் மற்றும் பும்ரா தங்கள் ஆதங்கத்தை சாவ்க வலைத்தளத்தில் வெளிப்படுத்தினர். ஒரே குடும்பமாக எப்போதும் மகிழ்ச்சியைப் பொழிந்த மும்பை இந்தியன்ஸ் இப்போது விரிசல்களை சந்திக்கிறது.

இதில் மேலும் ஓர் விரிசலை சச்சின் டெண்டுல்கர் கொடுத்துள்ளார் எனக் கூறி வருகிறார்கள். ஓய்வுக்குப் பின் இத்தனை ஆண்டுகள் அணிக்கு ஆலோசகராக உதவிசெய்து வந்தவர் இன்று அப்பதவியில் இருந்து விலகியுள்ளார். 2013ஆம் ஆண்டு ஓய்வுக்குப் பின் அணிக்கு ஆடுகளத்திற்கு வெளியே சேவை செய்துள்ளார். தன் அனுபவத்தை இளம் வீரர்களாக அணியில் சேர்ந்த ராகுல் சஹர், ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூரியகுமார் யாதவ் போன்றோர்களுக்கு வழங்கி அவரது வளர்ச்சியில் ஓர் பங்காக விளங்குகிறார்.

- Advertisement -

இச்செய்தி உண்மை என பலர் ஆரம்பத்தில் நம்பினர். ஆனால் அண்மையில் கிடைத்திருக்கும் செய்திப் படி இது முற்றிலும் வதங்தி எனக் கூறப்படுகிறது. மும்பை அணியில் அடுத்தடுத்து நிகழும் சிக்கலுக்கு மத்தியில் இது போல வேண்டுமென்றே சிலர் தவறான செய்திகளை பரப்பு வருகிறார்கள்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles