நியூஸி தொடர் அவமான தோல்வி.. ஜீரணிக்கவே முடியாது.. இந்த 3 கேள்விக்கு பதில் சொல்லுங்க.. இந்திய அணி மீது சச்சின் விமர்சனம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை, நியூசிலாந்து அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணிலே 3-0 என்ற கணக்கில் ‘ஒயிட் வாஷ்’ செய்து டெஸ்ட் தொடரை வென்றது.

- Advertisement -

இதற்குப் பதிலளித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், “இதனை ஏற்றுக்கொள்ள முடியாத கடினமான ஒன்றாகும்” என்று கூறினார்.

- Advertisement -

முன்னேற்பாடுகள் இல்லாத அணி, டெண்டுல்கர்:

சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது, “சொந்த மண்ணிலே இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியாத கடினமான ஒன்றாகும். இந்திய அணி எங்கே தவறு செய்தது என்று தெரியவில்லை. இப்பொழுது அணியில் சிறிய சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இது இந்திய அணியின், ஆயத்தமின்மை, மோசமான ஷாட் தேர்வு மற்றும் பயிற்சி பற்றாக்குறையை காட்டுகிறது. இருப்பினும், முதல் இன்னிங்ஸில் ஷுப்மான் கில் 90 ரன்களை எடுத்து நிலைத்தன்மையை காட்டி இருந்தார். ரிஷப் பண்ட் முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸில் இரு இரட்டை அரைசதங்களும் எடுத்து, புத்திசாலித்தனமாக சவாலான சூழ்நிலையிலும் அவர் தனது கால் தடத்தை பதித்துள்ளார்” என X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் அவர், “தொடர் முழுவதும் நியூசிலாந்து அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. அவர்களின் நிலையான ஆட்டத்திற்கு, 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறுவது ஒரு நல்ல முடிவே” என்றும் கூறியிருந்தார்.

சொந்த மண்ணில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ‘ஒயிட்வாஷ்’ ஆனது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு இங்கிலாந்து அணி 4 முறையும், ஆஸ்திரேலியா 3 முறையும், மேற்கிந்தியத் தீவுகள் 1 முறையும் இந்தியாவை ‘ஒயிட்வாஷ்’ செய்திருந்தது. இதன் பிறகு 3-க்கும் மேற்பட்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவை ‘ஒயிட்வாஷ்’ செய்த நான்காவது அணியாக நியூசிலாந்து திகழ்கிறது.

- Advertisement -

நியூசிலாந்து அணி, மூன்று டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில், மற்ற அணியை அதனுடைய சொந்த மண்ணில் வென்றது இதுவே முதல் நிகழ்வாகும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles