நேற்று அண்டர் 19 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மேலும் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சூரியவன்சி 80 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் உடன் 175 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இதற்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
விராட் கோலி தன்னுடைய பாராட்டில் கூறும் பொழுது ” அண்டர் 19 உலக கோப்பையை வென்றிருக்கும் இந்திய இளம் வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நாம் எல்லா வகையான பிரிவிலும் கிரிக்கெட்டில் ஆதிக்கத்தை செலுத்தி கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது அணியின் வீரர்கள் மற்றும் அணியின் துணை ஊழியர்கள் என அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று கூறியிருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய வாழ்த்து அறிக்கையில் ” இந்திய அணி இளம் வீரர்களின் வெற்றிக்கும் மேலும் அவர்கள் விளையாடிய அச்சமற்ற கிரிக்கெட்டையும் பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். முழு அணிக்கும், அணியின் ஊழியர்களுக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களிடம் வைபப் சூர்யவம்சம் இருக்கும் பொழுது காலத்தால் மறையாத பிளாக்பஸ்டர் எதிர்பார்க்கப்படுகிறது. சபாஷ் சூர்யவன்சி!” என்று கூறியிருக்கிறார்.

