SA vs BAN.. மீண்டும் ஒரு அதிரடி வெற்றி. தொடரும் சவுத் ஆப்பிரிக்காவின் ஆதிக்கம்.. டிகாக் சாதனையுடன் புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம்.!

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 13 வது உலகக்கோப்பை தொடரின் 23ஆவது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று மும்பையில் வைத்து மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

- Advertisement -

தென்னாபிரிக்க அணி கடந்த போட்டியிலும் அதிரடியான பேட்டியின் மூலம் 399 ரன்கள் குவித்ததால் அந்த அணியின் மீது எதிர்பார்ப்ப அதிகமாக இருந்தது. இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி கொடுத்தனர். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹென்றிக்ஸ் மற்றும் வாண்ட்டர் டுசன் இருவரும் முறையே 12 மற்றும் 1 ரன்னில் ஆட்டம் இழந்தனர். இதனைத் தொடர்ந்து டிகாகுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் மார்க்ரம். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி தென்னாப்பிரிக்க அணியை சரிவிலிருந்து மீட்டதோடு அணிக்கு வலுவான அடித்தளமும் அமைத்துக் கொடுத்தனர்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய குவின்டன் டி காக் மற்றும் மார்க்ரம் இருவரும் அரை சதம் எடுத்தனர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த மார்க்ரம் 69 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கினார் கடந்த போட்டியின் நாயகன் கிளாஸன். இந்த ஜோடி பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்களை அடித்து விளாசியது. மிகச் சிறப்பாக விளையாடிய டிகாக் இந்த உலகக் கோப்பை தொடரில் தனது மூன்றாவது சதத்தையும் ஒரு நாள் போட்டிகளில் இருபதாவது சதத்தையும் நிறைவு செய்தார். இதன் மூலம் குறைந்த வயதில் 20 சதங்களை எடுத்த வீரர் என்ற சாதனையும் படைத்தார். இதற்கு முன்பு இந்த சாதனை டிவில்லியர்ஸ் வசம் இருந்தது. அவர் 31 வயது மற்றும் பத்து நாட்களில்20 சதங்களை பூர்த்தி செய்து சாதனை படைத்தார். தற்போது 30 வயது மற்றும் 311 நாட்களில் அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார் டிகாக்.

- Advertisement -

இவர்கள் இருவரது சிறப்பான ஆட்டத்தால் சவுத் ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. மறுமுனையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிளாசில்ன் தனது அரை சதத்தை நிறைவு செய்தார். 200 ரன்கள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிகாக் 140 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகளுடன் 174 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய மில்லரும் அதிரடியாக விளையாட தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் 350 ரன்களை கடந்தது. ஆட்டத்தின் இறுதி ஓவரில் கிளாசன் 8 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 90 ரண்களில் ஆட்டம் இழந்தார்.. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 382 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. மில்லர் 15 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். யான்சன் ஒரு ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ஹசன் மஹ்மூத் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி துவக்கம் முதலே விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தது. அந்த அணியின் துவக்க வீரர் தன்ஷித் ஹசன் 12 ரன்களிலும் சான்டோ ரன் எதுவும் எடுக்காமலும் அனுபவ வீரர்களான ஷகீப் அல்ஹசன் ஒரு ரன்னிலும் முஷபிகுர் ரஹீம் 8 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஆல் ரவுண்டர் மெஹதி ஹசன் மிராஸ் 11 ரன்னில் அவுட் ஆக 81 ரன்களுக்கு ஆறு விக்கெட் இழந்து தடுமாறியது பங்களாதேஷ்.

- Advertisement -

அப்போது பங்களாதேஷ் அணியின் அனுபவம் மிக்க வீரரான மஹ்முதுல்லாஹ் ரியாத் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பங்களாதேஷ் அணியை மிகப்பெரிய தோல்வியிலிருந்து காப்பாற்றினார். சிறப்பாக விளையாடியவர் பின் வரிசை ஆட்டக்காரர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பங்களாதேஷ் அணி இருநூறு ரண்களை கடக்க உதவினார். நசும் அகமதுடன் 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் ஹசன் மஹ்முது உடன் 37 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இவர் தனது அரை சதத்தை நிறைவு செய்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மஹ்முதுல்லாஹ். சிறப்பாக விளையாடிய இவர் 111 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 11 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும்,

அவர் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் முஸ்தபிசுர் ரஹ்மான் 11 ரன்களில் ஆட்டம் இழக்க பங்களாதேஷ் அணி 46,4 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சவுத் ஆப்பிரிக்கா 149 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த அணியின் பந்து வீச்சில் ஜெரால்டு கோட்சி 3 விக்கெட்டுகளும் யான்சன் ரபாடா மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து நாலு வெற்றிகள் உடன் தென்னாப்பிரிக்க அணி 2 ரைட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles