பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை அவர்களது சொந்த மைதானத்தில் பெரிய ஆதிக்கம் செலுத்தி தோற்கடித்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் முதல் டெட்ஸ்ட்டின் போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களின் மேல் பழி போடுவது போல அவரது பேச்சு இருந்தது.
இதனைக் காரணம் காட்டி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கவாஸ்கர் ஆஸ்திரேலிய அணிக்குள் சிக்கல்கள் போய்க் கொண்டிருப்பதாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ” ஆஸ்திரேலியா அணியில் தற்போது அதீத பதட்டம் நிலவி வருகிறது. மேலும், ஜாஸ் ஹேசிலவுட்டின் செய்தியாளர்கள் சந்திப்பின் சர்சைப் பேச்சுக்குப் பிறகு அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். “
” பிறகு சில நாட்கள் கழித்து ஜாஸ் ஹேசில்வுட் இரண்டாவது டெஸ்ட் மட்டுமில்ல ஒட்டுமொத்த தொடரில் இருந்தே விலகியுள்ளார். அவரிடம் எந்தவித காயமும் தெரியாத போது காயத்தால் அவர் விலகுவது மர்மமாக இருக்கிறது. இதெல்லாம் முன்னொரு காலத்தில் இந்தியாவில் நடந்தது, தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அதனைச் செய்கிறது. ” என பயங்கர விமர்சனமாகப் பேசினார் சுனில் கவாஸ்கர்.
இதற்க்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் ரையன் ஹாரிஸ் ஆவேசமாக பதிலிதுள்ளார். அவர் பேசிருப்பதாவது, ” அணியில் எந்த வித பிளவுகளும் இல்லை. கவாஸ்கர் இதனைக் குறிப்பிட்டு பேசியதை அறிந்தேன். அதெல்லாம் வெறும் குப்பைப் பேச்சு. அவர் சொல்லியது போல் ஆஸ்திரேலியாவில் நிச்சயம் நடக்காது, ஆனால் இந்தியாவில் நடந்துள்ளது. நான் அங்கு வாழ்ந்திருப்பதால் எனக்கு இது நன்றாகத் தெரியும். “
மேலும், ” ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்தில் எந்த வித அரசியலுக்கும் இடமில்லை. ஜாஸ் ஹேசில்வுட் அவ்வாறு பேசியதற்காக நிச்சயம் அணியில் இருந்து இப்போது விலகவில்லை. எல்லாம் உள்நாட்டு மீடியாக்களின் வேலை. நாங்கள் பெர்த் டெஸ்ட்டில் மோசமாக விளையாடிததால் வந்ததன் விளைவு இது. ” என்றார் ஹாரிஸ்.

