ருத்துராஜை ஒதுக்கவில்லை.. பதுக்கி வைத்துள்ளோம்.. டி20ஐ தொடரில் அவரை எடுக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணம் – பிசிசிஐ திட்டம்

இந்திய அணியின் சீனியர் வீரர்கள் முழுவதும் ஓய்வு பெறுவதற்கு முன்பு இளம் வீரர்களை இந்திய அணியில் தகுந்த இடத்தில் வைத்து தயார் செய்து வருகிறது பிசிசிஐ. நடப்பு அணியில் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால், கில் இருவரும் தங்களது இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.

- Advertisement -

இந்திய அணியில் ஒப்பனராக விளையாட அத்தனை வீரர்கள் குவிந்து உள்ளார்கள். ஜெய்ஸ்வால், கில் தவிர கெய்க்வாட், கிஷான், அபிஷேக் ஷர்மா, சாய் சுதர்சன் ஆகியோர் உள்ளனர். ஐ.பி.எல் தொடரின் மூலம் பல திறமைகள் இந்திய அணியில் விளையாட வரிந்துக் கட்டிக் கொண்டு வரிசையில் நிற்கிறார்கள்.

- Advertisement -

அண்மையில் வங்கதேசம் அணிக்கு எதிரான இந்திய டி20ஐ தொடர் அறிவிக்கப்பட்டது. இதில் கில், பண்ட் இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அபிஷேக் ஷர்மா, பராக், நிதிஷ் ரெடி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். கிடைக்கும் அனைத்து வாய்ப்பிலும் சிறப்பாக செய்யும் ருத்துராஜ் கெய்க்வாடுக்கு இந்த தொடரில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

- Advertisement -

டி20ஐ தரவரிசைப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் இவரை இலங்கைத் தொடர், வங்கதேசத் தொடர் என அடுத்தடுத்து தவிர்ப்பதை இந்திய ரசிகர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் உண்மையில் பிசிசிஐ அவரை ஒதுக்கி வைக்கவில்லை, பதுக்கி வைத்துள்ளனர் என்ற செய்தி இன்று வெளியாகியுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் துவங்குகிறது. கடைசி 4 தொடர்களை இந்திய அணி தரமாக வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்த தொடரில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா & ஜெய்ஸ்வால் அமைவார்கள். மாற்று ஒப்பனராக ருத்துராஜ் கெய்க்வாட்டை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

- Advertisement -

கில் 3வது இடத்தில், கோஹ்லி 4இல், பின்னர் பண்ட, ராகுல் என அணித் தொடரும். 5 போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் நிச்சயம் காயங்கள் ஏற்படும் அதனால் பலமான மாற்று வீரர்கள் தேவை. அதனால் தான் கெய்க்வாட்டை அதிக சிகப்பு நிறப் பந்துக் கிரிக்கெட்டை விளையாட பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

தற்போது நடந்துக் கொண்டிருக்கும் இராணிக் கோப்பையில் அவர் தலைமை தாங்கி வருகிறார். அந்தத் தொடர் அக்டோபர் 5 வரை நடக்கவுக்கதால், அதனை முடித்துவிட்டு உடனே அக்டோபர் 6 வங்கதேச டி20ஐ தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை என்பதால் மட்டுமே அவர் வங்கதேச டி20ஐ தொடரில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles