ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் 57 பந்துகளில் 123 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்த இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஜெய்ஸ்வால் 6 ரன்னிலும், இசான் கிசான் டக் அவுட்டாகியும் வெளியேற அந்த அணி 24 ரன்கள் சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து கேப்டன் சூரியகுமார் யாதவ், ருதுராஜ் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அணியை சரி விலிருந்து மீட்டனர்.
அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 29 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். சூரிய குமார் அரை சதத்திற்கு மேல் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் பொறுப்பு அனைத்தும் ருதுராஜ் தலையில் வந்து விழுந்தது.
எனினும் ருதுராஜ்க்கு 32 பந்துகளில் 50 ரன்கள் கடந்த நிலையில் அதன் பிறகு ஐந்தாவது கியருக்கு மாறி ரன் வேகத்தை அதிகரித்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் வீசிய பந்துகளின் பவுண்டரி ,சிக்சர் என பவர் கட்டினார். குறிப்பாக ஆட்டத்தின் 18 வது ஓவரில் 25 ரன்களையும், 19வது ஓவரில் 12 ரன்களை அடித்த ருதுராஜ், திலக் வர்மா ஜோடி மேக்ஸ்வெல் வீசிய கடைசி ஓவரில் மூன்று சிக்சர் இரண்டு பவுண்டர்களை அடித்து 30 ரன்கள் சேர்த்தது.
இதன் மூலம் இந்திய அணி 222 ரன்கள் விளாசியது. ருதுராஜ் வாட்ச் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 123 ரன்கள் விளாசினார். இதில் 13 பவுண்டரிகளும் ஏழு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் நடப்பு தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் 200 ரன்னுக்கு மேல் இந்தியா அடித்து அசத்தியிருக்கிறது.
இதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீரர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனி நபர் அதிக பட்ச ஸ்கோர் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ருதுராஜ் பெற்று இருக்கிறார்.

