ஹர்திக் அப்படி என்னத்த நல்லா ஆடிட்டான்.. ஓவரா குதிக்காத.. இத செஞ்சா மட்டும் தான் மரியாதை – பாண்டியா குறித்து ஆர்.பி.சிங் கடுமையான விமர்சனம்

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டி20ஐ தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் பாண்டியா பேட்டிங் & பவுலிங் என இரு தரப்பிலும் நன்றாக செயல்பட்டும் ஆர்.பி.சிங் திருப்தி அடையாமல் விமர்சனம் செய்துள்ளார்.

- Advertisement -

முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி, இந்திய அணியின் ஆதிக்கமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியா மிகவும் நல்ல லைனில் அருமையாகப் பந்துவீசினார். 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

- Advertisement -

பந்துவீச்சை விட பேட்டிங்கில் இன்னுமே நன்றாக செயல்பட்டார். வெறும் 16 பந்துகளில் 245 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 39* ரன்களுடன் கூலாக நின்று போட்டியை முடித்தார். பாண்டியாவின் ஆட்டத்தை கிரிக்கெட் வல்லுனர்கள், ரசிகர்கள் என அனைவரும் பாராட்டினர். ஆனால் முன்னாள் இந்தியா வீரர் ஆர்.பி.சிங் அதற்கு எதிர்ப்புத் தெரவித்துள்ளார்.

- Advertisement -

அவர் கூறியதாவது, ” வங்கதேசம் போன்ற சாதாரண அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியதை வைத்து ஒரு வீரரின் ஃபார்மை தீர்மானிக்க கூடாது. ஹர்திக் பாண்டியா நன்றாக விளையாடினார், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இந்தப் போட்டியை ஒரு அளவுகோலாக வைத்து அவரை பெரிதாக பாராட்டுவது என்னைப் பொருத்தவரை தேவையற்றது. “

” ஹர்திக் பாண்டியாவை இதே போல ஒரு பலமான அணிக்கு எதிராக நின்று போட்டியை முடித்துக் காட்டச் சொல்லுங்கள். அப்போது பாராட்டலாம். வங்கதேச அணிக்கு எதிராக அவர் அடித்து ஆடியது சாதாரணம். காரணம், எதிரணி எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை. ” என்றார்.

- Advertisement -

மேலும், ” போட்டியில் ஹர்திக் பாண்டியா பற்றி பாராட்ட வேண்டிய ஒன்று அவரது பவுலிங் தான். முழுமையான நான்கு ஓவர்களை அவர் வீசியுள்ளார். உடல் தகுதி மற்றும் பந்துவீச்சை அவர் மேம்படுத்தி விளையாடுவது மிகவும் நல்லது. ” எனப் பந்துவீச்சுக்குப் பாராட்டினார் ஆர்.பி.சிங்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles