3 சீசனா என்ன பண்ணிட்டு இருந்தாரு.. அதான் கேப்டன் பதவியில இருந்து தூக்கிட்டாங்க.. காரணத்தைக் கூறும் ராபின் உத்தப்பா

இந்த ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட 30 போட்டிகளுக்கு மேல் நடைபெற்ற போதிலும், ரோஹித் சர்மா குறித்தும் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்தும் எழும் பேச்சுக்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பறிக்கப்பட்டதற்கு ரோகித் சர்மாதான் காரணம் என்று கூறியிருக்கிறார் உத்தப்பா.

- Advertisement -

ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணி எங்கு சென்றாலும், அவருக்கு எதிராக கரகோஷங்களை ரசிகர்கள் எழுப்பிக் கொண்டே வந்தார்கள்.

- Advertisement -

காரணம் சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக இருந்த போது கூட வெல்ல முடியாத ஐபிஎல் கோப்பையை, 2013ஆம் ஆண்டிற்கு பிறகு ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை எடுத்தவுடன் இதுவரை ஐந்து கோப்பைகளை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வென்று கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இப்படி ஒரு மகத்தான சாதனையை வைத்திருக்கும் வீரரிடம் இருந்து கேப்டன்சியை பறிப்பது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அமைந்துள்ளது. ஆனால் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலக்கியதற்கு காரணம் அவரது கேப்டன்சி செயல்பாடுகளும் மற்றும் பேட்டிங்கும்தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது
“ஹர்திக் பாண்டியா மும்பை அணியால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வீரர். எனவே அவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரராகவே பார்க்கிறார்கள். 2013ஆம் ஆண்டில் ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து கேப்டன்சி எடுக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போதும் அதே போன்று நிகழ்ந்துள்ளது. அப்போது சச்சின், ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் ரோஹித்துக்கு ஆதரவாக இருந்தார்கள்.

- Advertisement -

இங்கு ரோகித் சர்மாவின் பேட்டிங் தரத்தை பற்றி நான் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் கோடிகளை முதலீடு செய்யும் ஐபிஎல் அணிகளின் பார்வையில் இருந்து பார்க்கும்போது கடந்த நான்கு வருடங்களாக அவர் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை. மேலும் 2020ஆம் ஆண்டுக்கு பிறகு மும்பை அணி கோப்பையை வெல்லவில்லை. கடந்த மூன்று சீசனங்களிலும் ரோஹித் சர்மா 300க்கும் குறைவான ரன்களை அடித்துள்ளார்.

இதையும் படிங்க:எனது பேட்டிங்கால் யுவராஜ் சிங் நிச்சயம் வருத்தமடைவார்.. காரணம் என்ன.?. விளக்கம் கூறும் அபிஷேக் ஷர்மா

ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேன் ஆகவும் அவர் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் ஐபிஎல் தவிர இந்திய அணியில் அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். எனவே ரோஹித் சர்மாவை தாண்டி அணியை பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் ரோஹித் சர்மாவிடமிருந்து கேப்டன் பதவி எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இது குறித்து அவரிடம் முன்னரே பேச்சு வார்த்தை நடத்தி இருப்பார்கள். எனவே மும்பை அணி இப்படி ஒரு முடிவை எடுத்ததற்காக குறை கூற முடியாது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles