என்னால ஜீரணிக்க முடியல.. நான் ரொம்ப கேவலமாக பேட்டிங் & கேப்டன்சி செய்தேன்.. தோல்விக்கு காரணம் இதுதான் – ஒயிட் வாஷ் பற்றி ரோஹித் ஷர்மா விரிவான பேச்சு !

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் தொடர் இந்திய அணியின் வரலாற்றிலேயே மிக மோசமானதாக அமைத்துள்ளது. சொந்த மைதானத்தில் மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி முதல் முறையாக ஒயிட் வாஷ் ஆகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

- Advertisement -

முதல் டெஸ்ட்டில் ஆசியாவிலேயே குறைந்த முதல் இன்னிங்சில் ஸ்கோர், இரண்டாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணியிடம் சொந்த மைதானத்தில் முதல் முறையாக தொடர் இழப்பு, மூன்றாவது டெஸ்ட்டில் முதல் முறையாக 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் ஆவது என அனைத்துப் போட்டிகளும் ஒரு மோசமான சாதனையைப் படைத்துள்ளது ரோஹித் ஷர்மா & கௌதம் கம்பீர் கூட்டணி.

- Advertisement -

இது பற்றி கேப்டன் ரோஹித் ஷர்மா போட்டி முடிந்த பிறகு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ” ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைவது, தொடரை இழப்பது என்பது சுலபமாக எடுத்துக் கொள்ளும் விஷயம் அல்ல, சுத்தமாக ஜீரணிக்க முடியவில்லை. மீண்டும் ஒரு முறை நாங்கள் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். மறுபக்கம், நியூசிலாந்து வீரர்கள் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டனர். “

- Advertisement -

” முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நான் சரியாக ரன்கள் குவிக்கத் தவறினோம். ஆனால் இம்முறை 28 ரன்கள் முன்னிலை மற்றும் சுலபமான இலக்கு கிடைத்த போது, போட்டியில் நாங்கள் தான் வசதியான இடத்தில் இருந்ததாக நினைத்தேன். ஆனால் போட்டி சாதகமாக முடியவில்லை. இந்த தொடர் முழுவதும் நான் பேட்டிங்க்கு வரும் போது எனக்குள் நிறைய திட்டங்கள் இருந்தது ஆனால் என்னால் எதையும் வெளிக்காட்ட முடியவில்லை. அது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ” என்றார்.

மேலும், ” கில், ஜெய்ஸ்வால், பண்ட் மூவரும் இந்த பிட்சில் எவ்வாறு ஆட வேண்டும் என்பதைக் காட்டினர். ஒரு சீனியர் வீரராக கடந்த 3/4 ஆண்டுகளாக இத்தகு பிட்ச் அனுபமா கொண்டதால் எப்படி செயல்பட வேண்டுமென இன்னுமே நன்றாக தெரிந்தும், வெளிக்காட்ட முடியாமல் சுதப்பிவிட்டோம். மனத்தைத் தொட்டுச் சொல்கிறேன், நான் இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங் மற்றும் கேப்டன்சி இரண்டிலும் சரியாக செய்யவில்லை. இது என் மனதை உறுதிக் கொள்கிறது. ” என வருத்தமாக பேசினார் கேப்டன் ரோஹித் ஷர்மா.

- Advertisement -

அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் மிகப் பெரிய சவாலான 5 டெஸ்ட் போட்டிகள் தொடர் வரும் நவம்பர் 22 துவங்குகிறது. இதில் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியில் இந்தியா உள்ளது. இம்முறையும் டெஸ்ட் கோப்பை கனவாகவே போகும் போல.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles