டி20 உலக கோப்பைக்கு முன்பாகவே.. சஞ்சு சாம்சனிடம் ரோஹித் சர்மா கூறிய வார்த்தைகள்.. சாதித்தும் காட்டிய சாம்சன்.. வைரலாகும் பதிவு

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் கடைசி போட்டியில் இந்திய அணி சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய சாம்சன் மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெற்று ஃப்ரீய கேமியோ ஆடினார்.

- Advertisement -

அதற்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் சூழ்நிலையை உணர்ந்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இந்திய அணியையும் வெற்றி பெற வைத்து மேட்ச் வின்னராக மாறி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் உலகக் கோப்பை தொடக்கத்தில் வாய்ப்பு கிடைக்காத சாம்சன் குறித்து ரோகித் சர்மா கூறிய வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் உலகக் கோப்பைக்கு முன்பாகவே சஞ்சு சாம்சன் குறித்து ரோஹித் சர்மா “சஞ்சு சோர்ந்து போய்விடாதீர்கள். இது ஒரு பெரிய டோர்னமெண்ட் எனவே உங்களுக்கு விளையாட நிச்சயம் ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று பேசி இருக்கிறார். அதேபோல சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி சாதித்தும் காட்டி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles