நேற்று டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சங் ஆட்டம் இழக்காமல் 50 பந்தில் 97 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
அதே சமயத்தில் இந்த உலகக் கோப்பை தொடரின் ஆரம்பத்தில் அவர் இந்திய பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருக்கவில்லை. முதலில் அபிஷேக் ஷர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடங்கினார்கள். பிறகு அபிஷேக் ஷர்மா திண்டாட்டத்தின் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
மேலும் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு அம்பாசிடராக ஐசிசி இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை நியமித்தது. மேலும் உலகக்கோப்பை தொடக்கத்தில் ரோஹித் சர்மா இந்திய வீரர்களுடன் உரையாடல் நடத்தி இருந்தார். அந்த உரையாடலில் சஞ்சு சாம்சன் இடம் அவர் ஒரு முக்கிய விஷயத்தை சொல்லி இருக்கிறார். அது இப்பொழுது அப்படியே நடந்து ஆச்சரியப்படுத்தி உள்ளது.
ரோகித் சர்மா சஞ்சு சாம்சனுக்கு “சஞ்சுசோர்ந்து போக வேண்டாம். இந்த டி20 உலக கோப்பை என்பது மிக நீண்ட டோர்னமெண்ட். எனவே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் தயாராக இருங்கள்” என்று கூறி இருக்கிறார். இறுதியில் அவர் சொன்னபடியே வாய்ப்பு கிடைத்து, சஞ்சு சாம்சன் அதை வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

