என்ன வெளியில துரத்த நினைச்சாங்க.. ஆனா நான் இங்கிலாந்து பவுலர்களே இப்படிதான் தோக்கடிச்சேன்.. ரோகித் சர்மா பேட்டி

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியானது கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி ரோகித் சர்மாவின் சதத்தால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

- Advertisement -

போட்டி முடிவில், கேப்டன் ரோஹித் சர்மா நான் அவர்களுக்கு எதிராக திட்டம் வைத்து எனது காயை நகர்த்தினேன், அதனால் தான் வெற்றி பெற முடிந்தது என பேட்டி அடைநதுள்ளார்.

- Advertisement -

இந்திய அணியின் அபாரமான ஆட்டம்:

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 304 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும் மற்றும் பென் டக்கெட் 65 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சு தரப்பில் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்களை எடுத்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்டது இந்திய அணி. இதில் ரோகித் சர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 90 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸ் என 119 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதனால், இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்து தற்போது 2-0 என்று முன் நிலை வகிக்கிறது.

பேட்டிங் வரிசையை இரண்டாகப் பிரித்தேன்:

போட்டி முடிவில் தனது பேட்டிங் அணுகுமுறை குறித்து ரோகித் சர்மா கூறியதாவது: “நான் பேட்டிங் செய்ய வேண்டிய அணுகு முறையை இரண்டு துண்டாக பிரித்தேன். ஏனென்றால், இந்தப் போட்டியானது 50 ஓவர் வடிவம், T20 வடிவத்திற்கு ஒப்பிடும்போது சற்று நீளமானது மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை ஒப்பிடும்போது சற்று குறுகியது. நீங்கள் பேட்டிங்கை இரண்டாக பிரித்து, ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். நானும் அதைத்தான் தொடர்ந்து செய்தேன். ஒரு பேட்டர் அமைதியாக விளையாடி ஒரு கட்டத்தை நெருங்கும் போது, அந்தப் பேட்டர் தனது முழு வேகத்தைக் காட்டி விளையாட வேண்டும், நானும் இதைத்தான் கடைப்பிடித்தேன்”.

- Advertisement -

பேட்மேன் தெளிவாக இருக்க வேண்டும்:

மேலும் அவர், “நான் எனது இன்னிங்ஸில் இறங்கியதும், அவர்கள் என்ன செய்ய முயல்கிறார்கள் என்பதை நன்கு புரிந்துகொண்டேன்: எங்கள் உடலுக்கு நேராக பந்துவீசுவதையும், எங்களுக்கு இடைவெளி வழங்காமல் ஸ்டம்புக்கு நேராக பந்து வீசுவதையும் பார்த்த பிறகு தான் நான் எனது திட்டத்தையும் தயார் செய்தேன்.

அந்த வகையான பந்துகளை எப்படி சமாளிப்பது என்பதை கிடைக்கும் இடைவெளிகளை கண்டுபிடித்து, அதில் பந்தை அனுப்ப முயற்சி செய்தேன். ஒரு பேட்ஸ்மேனாக, நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்பதை புரிந்து கொள்வதில்தான் அத்தனை விஷயமே உள்ளது.”

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles