சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணியுடனான முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று 2 புள்ளிகளை சம்பாதிதுள்ளது. இப்போட்டியில் அக்சர் படேல் ஹாட்டிரிக் சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்தும் அது கேப்டன் ரோஹித் சர்மாவின் அஜாக்ரிதையினால் பறி போனது. இதனை ஈடுகட்டும் வகையில் ரோஹித் ஷர்மா ஓர் பரிகாரம் செய்வதாக உறுதியளித்துள்ளார்.
வங்கதேச அணியின் டாப் ஆர்டரை இந்திய பந்து வீச்சாளர்கள் உலுக்கி எடுத்துவிட்டனர். பவர்பிளே உள்ளேயே 5 விக்கெட்டுகளை இந்தியா எடுதுவுட்டது. ஆட்டத்தின் 8வது ஓவரில் வங்கதேசம் 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த போது அக்ஷர் படேல் பந்து வீச வந்தார். இரண்டாவது பந்தில் துவக்க வீரர் டன்சித் ஹாசத் விக்கெட்டை எடுத்தார்.
அதற்கு பின்னர் மறு பந்திலயே முஷ்பிகுர் ரஹ்மானை டக் அவுட் ஆக்கி பெவிலியன் திருப்பினார். மூன்றாவது பந்தில் ஹாட்டரிக் சாதனை நிகழ்த்தும் வாய்ப்பை கூட்ட விக்கெட் கீப்பரை சுற்றி ஸ்லிப் ஃபீல்டர்களை நிறுத்தினார் கேப்டன் ரோஹித் ஷர்மா. எதிர்பார்த்தது போலவே ஜேகேர் அலியின் பேட்டில் பட்டு ஸ்லிப்பில் இருந்த ரோஹித் சர்மாவிடம் கேட்ச் சென்றது. ஆனால் அவர் அதனைத் தவரவிட்டதால் ஹாட்ரிக் பறிபோனது.
இது பற்றி அக்சர் படேல் பேசியதாவது, ” மூன்றாவது விக்கெட்டுக்காக எட்ஜ் ஆன போது நான் நிச்சயமாக அவுட் எடுத்துவிட்டேன் என நினைத்து கொண்டாடத் துவங்கினேன். ஆனால் கேப்டன் ரோஹித் தவறவிட்டார். இருப்பினும் ஆட்டத்தின் போக்கில் இதெல்லாம் சாதாரணம் என்பதால் நான் எதுவும் ரியாக்ட் செய்யவில்லை. ” என்றார்.
ஐசிசி தொடரில் ஹாட்ரிக் என்பது மிகப் பெரிய சாதனை. அதனை இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் படேல் இழந்திருப்பது வருத்தமே. இது பற்றி ரோஹித் ஷர்மா கூறியதாவது, ” அது மிகவும் சுலபமான கேட்ச் தான். என்னுடைய தகுதிக்கு நான் அதை நிச்சயம் பிடித்திருக்க வேண்டும். அக்சர் படேலின் ஹாட்ரிக்கை பறி கொடுத்ததால், அதற்கு பரிகாரமாக அவரை நான் இரவு உணவுக்கு அழைத்துச் செல்கிறேன். ” என்றார்.

