அது எப்படி எங்களுக்கு மட்டும் இப்படி நடக்குது.. ஜெய்ஸ்வால் அவுட்டா? நாட் அவுட்டா? – நடுவர் முடிவு மௌனம் கலைத்த கேப்டன் ரோகித் சர்மா

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உள்ளது. ஏற்கனவே அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், பாக்சிங் டே டெஸ்ட்லும் தோற்றிருப்பதால், ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் சிட்னி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

இதனிடையே மெல்போர்ன் டெஸ்டின் போது இளம் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 84 ரன்கள் எடுத்திருந்த போது, 3வது நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் விவாதமாகியுள்ளது. ஏனென்றால் கம்மின்ஸ் வீசிய 71வது ஓவரின் போது பவுன்சர் பந்தை ஜெய்ஸ்வால் அடிப்பதற்காக பேட்டை வீசினார்.

- Advertisement -

மிட் விக்கெட் பக்கம் அடிக்க முயற்சிக்கப்பட்ட ஷாட் மிஸ்ஸாகி, பந்து விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி கைகளுக்கு சென்றது. அதன்பின் ஆஸ்திரேலியா அணி டிஆர்எஸ் கேட்டது. அப்போது ஜெய்ஸ்வால் பேட்டில் பந்து அடித்ததற்கான எந்த சாட்சியும் ஸ்னிக்கோமீட்டரில் காட்டவில்லை. ஆனாலும் 3வது நடுவர் அவுட் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ரோஹித் சர்மாவிடம் ஜெய்ஸ்வாலின் விக்கெட் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரோஹித் சர்மா பேசும் போது, அதில் இருந்து என்ன எடுத்து கொள்வது என்று தெரியவில்லை. வெளியில் இருந்து பார்க்கும் போது பந்து பேட்டில் உரசியதை போலவே தெரிந்தது. ஆனால் நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், அவர் பந்தை தொட்டார்.

டெக்னாலஜியை 100 சதவிகிதம் யாராலும் நம்ப முடியாது. ஆனால் இந்திய அணிக்கு மட்டும் தொடர்ப்பாக டெக்னாலஜி இப்படி இருப்பது தான் சோகம் அளிக்கிறது என்று தெரிவித்தார். அதேபோல் டெக்னாலஜியை நம்ப முடியவில்லை என்றால் எதற்காக பயன்படுத்துகிறீர்கள் என்ற இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வர்ணனையின் போதே கொந்தளித்தார்.

- Advertisement -

இந்த போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடிக்கும் வாய்ப்பு ஜஸ்ட் மிஸ்ஸில் தவறியுள்ளது. முதல் இன்னிங்ஸில் 82 ரன்கள் எடுத்திருந்த போது விராட் கோலியின் தவறால் ரன் அவுட்டாகி வெளியேறினார். 2வது இன்னிங்ஸில் நடுவரின் தவறால் 84 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles