இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரானது வருகிற பதினோராம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான இந்திய அணி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மீண்டும் இந்திய அணியில் இணைந்து ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடுவார்கள். இந்த இருவரும் ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி அசத்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்னும் 3 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஒரு சிறப்பான சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிராக முப்பது போட்டிகள் விளையாடியுள்ள அவர் இதுவரை 5 அரை சதம் 2 சதம் என மொத்தமாக 997 ரன்கள் குவித்திருக்கிறார். இன்னும் 3 ரன் எடுக்கும் பட்சத்தில் அவர் ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்கள் கடந்த வீரர் என எலைட் இந்திய வீரர்கள் பட்டியலில் இணைவார்.

