இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தற்போது டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்று ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவர் வருகிற 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை வரை விளையாட விருப்பம் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா இன்னும் 87 ரன்கள் எடுப்பதன் மூலமாக புதிய சாதனை ஒன்றை படைக்க காத்திருக்கிறார்.
இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா, இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட்டிலும் சரி டி20 கிரிக்கெட் என இரண்டிலும் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு கோப்பையை வென்ற கொடுத்ததோடு டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதற்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்று தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு வீரராக மட்டுமே தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் ரோஹித் சர்மா லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இதுவரை 352 போட்டிகளில் விளையாடி இதுவரை 13,913 ரன்கள் குவித்திருக்கிறார். இன்னும் 87 ரன்கள் குவித்தால் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் குவித்த ஐந்தாவது இந்திய வீரர் என்கிற சாதனையை படைப்பார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி மற்றும் கங்குலி ஆவியார் இந்த சாதனைகளை படைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

