ரோஹித் ஷர்மாவை வலைத்துப் போட திட்டம் தீட்டும் தோனி.. உறுதியாக சொல்லும் பிரபல கிரிக்கெட் வல்லுநர்

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு முன்பு டிரேடிங் மற்றும் ஏலம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பெரிய திருப்புமுனையாக கிரீன் பெங்களூர் அணிக்கு செல்ல அந்தப் பணத்தை வைத்து ஹார்திக் பாண்டியாவை மீண்டும் வாங்கியது மும்பை இந்தியன்ஸ். அதுமட்டுமில்லாமல் மும்பை அணியில் புதிய கேப்டனாகவும் பொறுப்பேற்றுள்ளார்.

- Advertisement -

இதனால் ஹிட்மேன் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்தில் கிடக்கின்றனர். ஒரு பக்கம் மற்ற அணிகள் ரோஹித்தை வாங்க மும்பையை அணுகியது ஆனால் டிரேடிங் மறுக்கப்பட்டது. இன்று மாலை ரோஹித் சென்னை செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். காலம் தான் பதில் சொல்லும் என பிரபல கிரிக்கெட் வல்லுநர் பிரசன்னா தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திக்கா இன்று சென்னை அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஹித் – தோனி வீடியோவுக்கு மஞ்சள் ஹார்ட் கமன்ட் செய்தார். இது பரபரப்பை உண்டாக்கியது. முன்னாள் சென்னை வீரர் பத்ரினாத்தும் ரோஹித் ஷர்மா சென்னை ஜெர்சி அணிந்திருந்த ஓர் ஃபோட்டோ எடிட்டை பகிர்ந்து ‘ ஒருவேளை நடந்தால் ’ என பதிவு செய்தார்.

- Advertisement -

ஒரு வேளை எல்லாம் சரியாக நடந்தால் ரோஹித் ஷர்மா சென்னை அணியில் காணப்படுவார். ஆனால் இதற்கு மிகவும் குறைந்த வாய்ப்பே. காரணம் ஏற்கனவே ரோஹித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மும்பை அணி மேல் அவர்களது ரசிகர்கள் மத்தியிலேயே வெறுப்பை உண்டாக்கியுள்ளது.

பாண்டியா மும்பை அணிக்கு வரும் முன்பே, கேப்டன் பதவியைக் கொடுத்தால் மட்டுமே மீண்டும் வருவதாக கன்டிஷன் போட்டார். இதனை ரோஹித்திடம் தெரிவித்த மும்பை நிர்வாகம் தெரிவிக்க அவரும் சம்மதித்தார். இப்படியாக இந்த கேப்டன்சி பொறுப்பு கைமாறியது.

- Advertisement -

ரோஹித் சர்மாவை வெளியே அனுப்பினால் மீண்டும் மும்பை அணி பெரிய வெறுப்பை சம்பாதிக்கும், தற்போது நிலமையை விட பல மடங்கு அதிகமாக. இதனைக் கருத்தில் கொண்டு மும்பை அணி கூர்மையாக முடிவெடுக்கும். எப்படி இருந்தாலும் அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன் ரோஹித் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்.

ஒரு வருடத்திற்காக இத்தனை ஆண்டுகள் சேவை செய்த வீரரை அனுப்புவதற்கு தயங்குவர். ஒரு வேளை வாக்குவாதம் எதேனும் ஏற்பட்டு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு சென்னை அணிக்கு வந்தாலும் கொண்டாடப்படுவார். அவருக்கு பதிலாக சென்னை அணி 15 கோடிகளை மும்பை அணிக்கு வழங்கும். எந்த வீரரையும் அனுப்பாது என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒப்னராக ருதுராஜ் – கான்வே நல்ல ஜோடியாக திகழ்கின்றனர். பழைய படி ரோஹித் ஷர்மா மிடில் ஆர்டரில் இறங்கி அதிரடி காட்டினால் சிறப்பாக இருக்கும். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles