மீண்டும் தேடி வரும் கேப்டன் பதவி.. முடிவு செய்த பிசிசிஐ.. ரோஹித் சர்மாவுக்கு ஜாக்பாட்

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி விளையாட முடித்த பிறகு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரானது விளையாட உள்ள நிலையில் மீண்டும் ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனான சுப்மான் கில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட கழுத்து சுளுக்கு காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் இரண்டாவது போட்டிக்கு பிறகு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில் அதற்குள் சுப்மான் கில் உடல் தகுதி பெறுவது கேள்விக்குறியாக உள்ளது.

- Advertisement -

மேலும் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேற, அவர் குணமாகி வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தேவைப்படும். மேலும் ரிஷப் பண்ட் அல்லது ஹர்திக் பாண்டியா இருவரில் யாரேனும் ஒருவர் கேப்டன் பொறுப்பை ஏற்று வழி நடத்தினால் கில்லின் கேப்டன்ஷிப் குறித்து ஒப்பீடுகள் எனும். இந்த சங்கடங்களை தவிர்ப்பதற்காக ஒரு நாள் தொடருக்கு மட்டும் மீண்டும் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என்று பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles