ஐபிஎல் தொடரில் மும்பை அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாக இருந்த ரோகித் சர்மா அண்மையில் அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு காரணம் ஹர்திக் பாண்டியா தான் என்று கூறப்பட்டது. தாம் வந்தால் கேப்டனாக தான் வருவேன் என்று மும்பை அணியிடம் ஹர்திக் பாண்டியா போட்ட கண்டிஷன் தான் தற்போது ரோகித் சர்மாவின் இடம் பறிபோகி இருக்கிறது.
இந்த நிலையில் இது ரோகித் சர்மாவின் ரசிகர்களை கடுப்படையச் செய்திருக்கிறது. பலரும் மும்பை அணியை சமூக வலைத்தளத்தில் வைத்து செய்கிறார்கள். ஆர் ஐ பி மும்பை இந்தியன்ஸ் என்ற ஹேஷ்டேக் கடந்த 48 மணி நேரமாக ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் முக்கிய கணவாக இந்திய டி20 அணியின் கேப்டனாக வேண்டும் என்ற மெயின் சுவிட்சில் தற்போது பிசிசிஐ கை வைத்திருக்கிறது.
பிசிசிஐ நிர்வாகிகள் வரும் டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை யார் தலைமை தாங்க வேண்டும் என்பது குறித்து ரோகித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட் ,தலைமை தேர்வுக்குழு உறுப்பினர் அஜித் அகார்கர் ஆகியோருடன் பேசி இருக்கிறார். இதில் டி20 உலககோப்பை இந்திய அணிக்கு தலைமை தாங்க ரோகித் சர்மாவும் ஓகே சொல்லிவிட்டார் என்று செய்திகள் வெளியாகிறது.
ரோகித் சர்மா விளையாடுகிறார் என்றால் விராட் கோலியும் டி20 உலக கோப்பைக்கு திரும்ப 99 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.இதனால் வரும் டி20 உலக கோப்பையில் ரோஹித், கோலி போன்ற சீனியர் வீரர்களும் திரும்பி விடுவார்கள். பிசிசிஐயின் இந்த நகர்வை ஹர்திக் பாண்டியா கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவி என்பதைவிட இந்திய டி20 அணியின் கேப்டன் என்பதுதான் கூடுதல் பெருமை. அதுவும் உலகக்கோப்பை போன்ற தொடரில் இந்திய அணியை வழி நடத்துவதெல்லாம் யாருக்கும் கிடைக்காது. அப்படி ஒரு நல்ல வாய்ப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு கிடைக்க இருந்தது.
ஆனால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணி மூலம் செய்த செயலால் தற்போது பிசிசிஐயே ஆப்பு வைத்திருக்கிறது. ரோஹித் டி20 உலக கோப்பைக்கு திரும்பினால் ஹர்திக் பாண்டியா அணிக்குள் வருவாரா என்பதை சந்தேகம்தான் என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

