மும்பையை விட்டா எந்த டீமுக்கு கேப்டனாக ஆசை.. ரோகித் சர்மாவின் பதில்.. உண்மையா இது நடந்திடுமோ.?

ஐபிஎல்லில் வெற்றிகரமாக திகழக்கூடிய இரு அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ். இவ்விரு அணிகளுமே தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன.

- Advertisement -

இளம் வீரர்களை உருவாக்குவதில் இரு அணிகளும் சிறந்தது. மும்பை அணியில் விளையாடிய பல வீரர்கள் தற்போது இந்தியாவிற்காக விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களில் ஹர்திக் பாண்டியா, ஜஸ்ட்பிரீத் பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் இந்தியாவின் நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் ருத்ராஜ் தற்போது இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். அதிலும் மும்பை அணி ஒவ்வொரு வருடத்திலும் திறமையான வீரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இவ்விரு அணிகளுக்குமே ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் உண்டு. காரணம் சென்னை அணிக்கு முதன் முதலில் கேப்டன் ஆனவர் எம் எஸ் தோனி மற்றும் மும்பை அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர்.

- Advertisement -

இவர்கள் இருவரால்தான் மற்ற அணிகளை விட இந்த இரு அனைகளுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு என்றும் கூறலாம். ஆனால் மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா மும்பை அணியை வெற்றிகரமான அணியாக உருவாக்கினார். அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகுதான் 2013 ஆம் ஆண்டு முதல் முதலாக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார்.

அதற்குப் பிறகு 2015, 2017, 2019, 2020 ஆகிய நான்கு வருடமும் மும்பை அணிக்காக ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்தார். ஆனால் அவரைத் தற்போது மும்பை அணி நிர்வாகம் கேப்டன்ஷியில் இருந்து விடுவித்து ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக நியமித்துள்ளது. இது சர்ச்சையை கிளப்பி சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஹர்திக் பாண்டியாவே முதன் முதலில் மும்பை அணிக்காகத்தான் களமிறங்கினார். பிறகு 2022ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு அவர் தலைமையில் ஐபிஎல் கோப்பையும் வென்று கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் தற்போது ரோஹித் சர்மாவை கேப்டன்சியிலிருந்து விலக்கியது அவரது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ரோஹித் சர்மாவிடம் நடைபெற்ற ஒரு நேர்காணலில் மும்பை அணியைத் தவிர்த்து வேறு எந்த அணிக்கு கேப்டனாக விருப்பம் என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ரோஹித் சர்மா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரோஹித் சர்மாவிற்கு இந்திய மைதானங்களிலேயே கொல்கத்தா மைதானம் மிகவும் ராசியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles