என் முடிவு இதுதான்.. என்னால அவ்வளவு சீக்கிரம் இதை மாத்திக்க முடியாது.. ஒரு நாள் மட்டும் டெஸ்ட் தொடர்களில் ஓய்வு குறித்து ரோஹித் சர்மா

டி20 உலக கோப்பை தொடரில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி அந்த உலகக் கோப்பை வெல்லவும் முக்கிய காரணமாக அமைந்தவர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.

- Advertisement -

உலகக் கோப்பையை வென்றதோடு டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? என்று தனது முடிவை அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தோல்வி கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் ஆட்ட முறையை முற்றிலுமாக மாற்றி இருந்தது என்று கூறலாம். அரை சதம் அல்லது சதத்திற்காக விளையாடினால் அது இந்திய அணிக்காக ஒருபோதும் கை கொடுக்காது என்பதை உணர்ந்த ரோகித் சர்மா அதிரடியாக விளையாடும் முறையை ஆரம்பித்தார். அதை தன் வாயால் வெறுமனே சொல்லாமல் அதை எப்படி செய்வது என்று தனது செயலாலும் காட்டி இருக்கிறார்.

- Advertisement -

அவர் ஆரம்பித்ததன் விளைவு அவருக்கு பின்னால் வரும் அனைத்து பேட்ஸ்மென்களும் அதே ஆட்டமுறையை கடைப்பிடித்து குறைவான நேரத்திலேயே அதிக ரன்கள் அடித்து விட்டு சென்றனர். டி20 கிரிக்கெட்டில் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடு வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்ற ரோகித் சர்மா தனது ஓய்வு குறித்த கேள்விக்கு சுவாரசியமான பதில்களை கூறி இருக்கிறார்.

இது குறித்து ரோஹித் சர்மா விரிவாக கூறும்பொழுது “நான் இதை ஏற்கனவே கூறியது தான். நான் கிரிக்கெட்டில் இருந்து அவ்வளவு எளிதாக ஓய்வு பெற்று விடமாட்டேன். இன்னும் நீண்ட கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஓய்வு குறித்து நான் இப்போது எதையும் யோசிக்கவில்லை. வாழ்க்கை என்னை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதை காண வேண்டும். தற்போது நான் நன்றாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன் என்பதை உணர்கிறேன்.

- Advertisement -

இன்னும் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதை எனது விருப்பம். வெளிப்படையாக ஒன்றை கூற வேண்டும் என்றால் நான் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதுமட்டுமல்லாமல் தற்போது அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்பு வருகிறது. எனவே அதில் கவனத்தை செலுத்தி அதை வெல்ல முயற்சிப்போம்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:கடைசி டி20 போட்டி.. சிக்கலில் மாட்டிய இந்தியா.. சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன்.. ஜிம்பாப்வேவிற்கு 168 ரன்கள் இலக்கு

கடந்த ஆண்டு ஒரு நாள் உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு இருந்த போதும் இறுதிப் போட்டியில் எதிர்பாராமல் தோல்வியடைந்தது இந்த சூழ்நிலையில் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியை வெல்ல வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருக்கும் என்பது இவரது கருத்தின் மூலம் தெரிகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles