முன்னாள் சிஎஸ்கே வீரர்தான் கேப்டன்.. ரோஹித் சர்மா எடுத்த திடீர் முடிவு.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய விருந்து

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக திகழ்ந்துவரும் ரோகித் சர்மா தற்போது டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த சூழ்நிலையில் 7 வருடத்திற்கு பிறகு மீண்டும் ரோகித் சர்மா இந்திய உள்நாட்டு தொடர்களில் விளையாட காத்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் தொடர் போட்டிகள் அட்டவணையின் காரணமாக பெரிய வீரர்கள் யாரும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. இந்த சூழ்நிலையில் ஒரு நாள் தொடரில் மட்டும் விளையாடி வரும் ரோகித் சர்மா 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை வரை விளையாடுவதை குறிக்கோளாக வைத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவர் பேட்டிங்கில் தொடர்ந்து டச்சில் இருக்க உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் நாளை துவங்க உள்ள விஜய் ஹசாரே ட்ராபியில் ரோஹித் சர்மா மும்பை அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடுவார் என்று தெரிகிறது. நாளை நடைபெற உள்ள போட்டியில் சிக்கிம் அணிக்கு எதிராக விளையாடும் ரோகித் சர்மா அதற்குப் பிறகு வருகிற 26 ஆம் தேதி உத்தரகாண்ட் அணிக்கு எதிராக களம் இறங்கி விளையாட உள்ளார். இது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மும்பை அணிக்கு ஆல்ரவுண்டர் சர்துல் தாகூர் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். தாகூர் முன்னாள் சிஎஸ்கே வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles