முடிவுக்கு வந்தது ரோஹித் ஷர்மாவின் 30 இன்னிங்ஸ் சாதனை.. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து இருந்தால் தப்பித்து இருக்கலாம்.. !

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இன்று சென்சூரியன் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளது. வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் தென்னாபிரிக்கா கேப்டன் பவுமா டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார். முதல் 50 ஓவரில் இதுவரை இந்திய அணி 176/7 என்ற நிலையில் உள்ளது.

- Advertisement -

துவக்க ஆட்டக்காரர் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா 5 ரன்னில் தன் விக்கெட்டை பறிகொடுத்து நடையைக் கட்டியது பெரிய ஏமாற்றமாக அமைந்தது. 5வது ஓவரில் ரபாடா வீசிய பந்தை புல் ஷாட் அடிக்க முயன்று டீப்பில் கேட்ச் கொடுத்தார். வழக்கமாக புல் ஷாட்டில் சிக்சர்கள் பரக்கவிடும் ரோஹித் ஷர்மா டெஸ்ட்டில் கஷ்டப்பட்டுகிறார்.

- Advertisement -

அவரை புல் ஷாட் ஆட வைத்து விக்கெட் எடுக்க வேண்டுமெனவே எதிரணி ஷாட் பாலாக வீசும். இது ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு அடுத்து தென்னாபிரிக்காவிலும் பந்து வீச்சாளர்களுக்கு உதவியுள்ளது. வெள்ளைப் பந்து போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் புல் ஷாட்டுக்கு தூண்டும் வலையில் சிக்குவதை அவர் கவனித்தல் மிகவும் அவசியம்.

- Advertisement -

ரோஹித் ஷர்மா 5 ரன்னில் வெளியேறியதன் மூலம் 30 இன்னிங்ஸ் ஸ்ட்ரீக் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 30 டெஸ்ட் இன்னிங்சில் குறைந்தது 11 ரன்களாவது சேர்த்துள்ளார். இன்று ஒற்றை இலக்கு ரன்னில் அவுட் ஆனதன் மூலம் அச்சாதனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இது தான் ரோஹித் ஷர்மாவின் குறைந்த ஸ்கோராக அமைந்துள்ளது.

இது தவிர்த்து மற்றொரு ரோஹித் ஷர்மாவின் சாதனையும் தகர்த்தப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2097 ரன்கள் (42 இன்னிங்ஸ்) என இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடித்துக் கொண்டு இருந்த அவரை விராட் கோலி முந்தியுள்ளார்.

- Advertisement -

இதுவரை தென்னாபிரிக்கா மண்ணில் டெஸ்ட் சீரிஸ் வெல்லத இந்திய அணி இம்முறை அதை மாற்றி எழுத வேண்டுமெனில் அதற்க்கு பேட்டிங்கில் ரோஹித் சர்மாவின் பங்கு முக்கியம். அதனால் தவறான ஷாட்களை அவர் தவிர்த்து ஜெய்ஸ்வால் மற்றும் கில்லுக்கு துணையாக நின்று ஆடுவது அவசியம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles