பண்ட் முதலில் இதைக் கத்துக்கணும்.. மனசுல என்ன நினைச்சுட்டு இப்படி பன்றாருனு தெர்ல – குறை கூறும் ரோஹித் ஷர்மா

இந்தியா – ஆஸ்திரேலிய இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி மிகவும் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடந்த விறுவிறுப்பான நான்காவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி வெற்றியை இந்திய அணியின் கையில் இருந்து பறித்துத் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

- Advertisement -

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியான 4வது டெஸ்ட்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா மிகவும் 150 ரன்களில் கப்பல் கவிழும் நிலையில் இருந்த போது நிதிஷ் குமார் ரெட்டி அபார சதம் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அரை சதம் அடித்து அணியை மீட்டனர். இறுதியில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

105 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்கள் சேர்க்க இந்திய அணிக்கு 340 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடைசி நாளான இன்று போட்டியை டிரா செய்யும் மனநிலையுடன் இந்திய வீரர்கள் களமிறங்கினர். கடகடவென மூன்று விக்கெட்டுகள் போன போதிலும் ஜெய்ஸ்வால் – பண்ட் நிலைத்து நின்று ஆடினர். ஆனால் நாதன் லயன் வீசிய பந்தை பண்ட் சிக்சர் அடிக்க முயன்று விக்கெட்டைப் பறிக் கொடுத்து போனது பெரிய சிக்கலை உண்டாகியது.

- Advertisement -

மேற்கொண்டு இந்திய அணி வெறும் 34 ரன்கள் மட்டுமே சேர்த்து 6 விக்கெட்டுகளை இழந்து கையில் இருந்தப் போட்டியை நழுவியது. எளிதாக டிரா செய்ய வேண்டியப் போட்டியை இழந்து 1-2 என தொடரில் பின்தங்கியது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இடத்தையும் இது பாதிக்கிறது. ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சிலும் தேவை இல்லாத ஷாட் மூலம் விக்கெட்டை அலட்சியமாக இழந்தார்.

இது குறித்துப் போட்டி முடிந்தப் பின்னர் ரோஹித் ஷர்மா பத்திரிக்கையாளர்களிணம் பேசினார். அவர் கூறியதாவது, ” இன்றையப் போட்டியில் தூபி அடைந்துள்ளோம், மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. ரிஷப் பண்ட் முதலில் அவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அவர் அறிய வேண்டும். போட்டியை எப்படி அணுக வேண்டும் என்பதை மற்ற வீரர்கள் அவரிடம் இதனை எடுத்துச் சொல்வதை விட அவரே அறிந்துக் கொள்வதே நல்லது. “

- Advertisement -

” கடந்த காலங்களில் அவரின் இந்த அணுகுமுறை பல முக்கிய வெற்றிகளைக் கொடுத்துள்ளது. சில சமயம் அவரின் இந்த ஆட்டத்தை தக்க வைக்க வேண்டும் எனத் தோன்றும், ஆனால் சில நேரம் தேவை இல்லாத இந்த அணுகுமுறை போட்டியையே பாதித்து கடுப்பாக்குகிறது. இதனால் ஒரு கேப்டனாக அவரிடம் இதைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்க முடியவில்லை. இந்த நேரத்தில் இது தேவையா இல்லையா என்பதை அவர் அறிந்துக் கொள்வது மிகவும் அவசியம். ” என்றார் கேப்டன் ரோஹித் ஷர்மா.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles