மும்பை இந்தியன்ஸ் நடந்து முடிந்த தங்களின் தக்கவைப்பு வீரர்களின் பட்டியலை அறிவித்திருந்தது. இதில் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா தக்கவைப்பு பட்டியலில் ஐந்து பெயர்களில் மூன்றாவது குறைந்த சம்பளத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தக்கவைப்பு வீரர்களின் பட்டியல் பின்வருமாறு: ★ஜஸ்பிரித் பும்ரா- தலா 18 கோடியும் ★கேப்டன் ஹர்திக் பாண்டியா- தலா 16.35 கோடியும் ★சூர்யகுமார் யாதவ்- தலா 16.35 கோடியும் ★ரோஹித் சர்மா- தலா 16.30 கோடியும் ★திலக் வர்மா- தலா 8 கோடியும் பெற்றனர். ஏல முடிவில் மீதமுள்ள மும்பை இந்தியன்சின் ரூபாய் கணக்கு, தலா 45 கோடியாகும்.
2025 ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸில் தனது தக்கவைப்பு மதிப்பாக வெறும் ₹16.30 கோடி சம்பளத்திற்கு ஏன் அவர் ஒப்புக் கொண்டார் என்பதை விளக்கியுள்ளார்.
“டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை அதிக அளவில் முன்னிலைப்படுத்தும் வீரர்கள் பெற வேண்டும்” என்று மும்பை இந்தியன் முன்னாள் கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மாவின் வீடியோ வெளியிடல்:
மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்த ஒரு X வலைத்தள வீடியோவில், ரோகித் சர்மா ஏன் குறைந்த சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டார் என்பதைத் குறித்து மனம் திறந்து உள்ளார்.
ரோகித் சர்மா,“உங்களுக்கு தெரியும், நான் டி20-ல் இருந்து ஓய்வு பெற்றதால், இந்த தக்கவைப்பு இடம் எனக்கு சரியானது என்று நினைக்கிறேன். தேசிய அணியை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் வீரர்களை பிரதிநிதித்துவம் படுத்த வேண்டும். நான் எதை நம்புகிறேனோ… அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்…”
மேலும் அவர்,“மீண்டும் நான் மும்பை இந்தியன்ஸின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் மும்பையில் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். நான் எனது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கிய இடமும் மும்பை தான். எனவே இந்த நகரமானது மிகவும் சிறப்பு வாய்ந்தது, நான் இங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், நீங்கள் நீண்ட நேரம் விளையாடும்போது, அந்த அணியுடன் பல நினைவுகள் உருவாகும். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகள் எங்களுக்கு சிறந்ததாக அமையவில்லை. அதை நாங்கள் மாற்ற விரும்புகிறோம். நாங்கள் ஒருவருக்கொருவர் உதவினால் அதை மாற்ற முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவை விட குறைந்த சம்பளத்துக்கு ரோகித் சர்மா ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

