சச்சின் சாதனையையே முறியடித்த ஹிட்மேன்.. 11 ஆயிரம் ரன்களை விளாசியதிலும் டாப்.. இதுதான்டா ரோஹித் சர்மா

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜேக்கர் அலி – ஹிருடாய் இருவரும் இணைந்து 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக ஆடிய ஹிருடாய் சதம் விளாசி அசத்தினார்.

- Advertisement -

இதன் காரணமாக வங்கதேசம் அணி 49.4 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் 229 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா – சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

- Advertisement -

பொளந்த ரோஹித் சர்மா

- Advertisement -

துபாய் ஆடுகளம் ஸ்பின்னர்கள் பவுலிங் செய்ய வரும் போது, ரன்கள் சேர்ப்பது கடினமாக மாறும். இதனால் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி கொள்ள ரோஹித் சர்மா – சுப்மன் கில் கூட்டணி முடிவு செய்தது. இதனால் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்சரை விளாசி ரோஹித் சர்மா அசத்தினார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 36 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த ஆட்டத்தில் 41 ரன்கள் சேர்த்ததன் மூலமாக ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை விளாசிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி ஆகிய இந்திய வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை விளாசி இருந்தனர்.

- Advertisement -

11 ஆயிரம் ரன்கள்

இந்த பட்டியலில் ரோஹித் சர்மாவும் இணைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 11 ஆயிரம் ரன்களை விரைவாக விளாசிய 2வது வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். இவருக்கு முன்பாக விராட் கோலி 221 இன்னிங்ஸில் 11 ஆயிரம் ரன்களை விளாசியதே சாதனையாக இருந்தது. இதன்பின் ரோஹித் சர்மா 261 இன்னிங்ஸில் 11 ஆயிரம் ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.

இவருக்கு பின் சச்சின் டெண்டுல்கர் 276 இன்னிங்ஸில் 11 ஆயிரம் ரன்களையும், ரிக்கி பாண்டிங் 286 இன்னிங்ஸில் 11 ஆயிரம் ரன்களையும், கங்குலி 288 இன்னிங்ஸில் 11 ஆயிரம் ரன்கள்ஐயும், காலிஸ் 293 இன்னிங்ஸில் 11 ஆயிரம் ரன்களையும் எட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் 11 ஆயிரம் ரன்களை விளாசிய 10வது சர்வதேச வீரர் என்ற பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles