இன்று இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்று வரும் நிலையில் தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து 270 ரன்கள் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி விளையாடி வரும் நிலையில் தொடக்க வீரர் ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இருக்கிறார். வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினார்கள்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 155 பந்துகளில் 155 ரன்கள் குவித்தது. இதில் 73 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 75 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா தென்னாபிரிக்க அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்திருக்கிறார். இதுவரை சச்சின் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 1734 ரன்கள் குவித்திருக்கும் நிலையில் அதனை ரோகித் சர்மா முறியடித்து சாதனை 1735 ரன்கள் குவித்து படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

