சும்மா பேசமுன்னு பேசாதீங்க.. பாகிஸ்தான் போய் இந்தியா ஆடி இருந்தா உங்க கதை கந்தல் ஆயிருக்கும் – ராபின் உத்தப்பா அதிரடிப் பேச்சு

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது. குரூப் ஏ – வில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் குரூப் பி – யில் தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்குத் தகுதிப் பெற்றுள்ளது.

- Advertisement -

இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயுள்ள சிக்கல்கள் காரணமாக பாகிஸ்தானுக்குச் சென்று இந்திய அணி விளையாடக்கூடாது என இந்திய அரசாங்கம் கடுமையாகச் சொன்னதால் இந்தியாவின் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடக்கின்றது. இந்திய அணி இவ்வாறு ஆடுவது அவர்களுக்கு பெரியச் சாதகமாக அமைகிறது. இந்திய அணி ஒரே மைதானத்தில் ஆடுவது பயண அலைச்சலை நீக்குகிறது என பல்வேறு நாட்டு வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

- Advertisement -

இதற்க்கு சரியான பதிலடியை முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா கொடுத்துள்ளார். அவர் பேசியிருப்பதாவது, ” இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடததற்கு அரசியல் சார்ந்த காரணங்கள் உள்ளன. அரசு அனுமதிக்கவில்லை என்றால் அங்கு விளையாட முடியாது, வேறு மைதானத்தில் தான் போட்டிகளை நடத்த இயலும். அதுதான் இப்போதும் நடந்துள்ளது. ஒருவேளை அனைவர் கேட்பது போலவே இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து ஆடியிருந்தால் பல்வேறு சாதனைகள் நொறுக்கப்பட்டு இருக்கும். “

- Advertisement -

” பாகிஸ்தானின் ஃபிளாட் மைதானத்தில் இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும் சதம் அடிக்கும் வாய்ப்புக் கிடைத்து இருக்கும். எந்த மைதானமாக இருந்தாலும் இறுதியில் எந்த ஒரு அணி பேட்/பந்து இரண்டிலும் சிறப்பாக செயல்படுகிறதோ அந்த அணியே வெற்றியைத் தட்டிச் செல்லும். அவ்வாறு தான் வங்கதேச அணிக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் இந்தியா சிறப்பாக விளையாடி அரை இறுதிக்குத் தகுதிப் பெற்றது. “

மேலும், ” துபாயில் மட்டுமே விளையாடுவது இந்திய அணிக்கு பரீட்சியமானதாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. வாசிம் அக்ரம் கூறியது போல துபாய் மைதானம் மட்டும் இல்லாமல் ஷார்ஜா, அபுதாபி ஆகிய மைதானத்தில் மாற்றி மாற்றி ஆடி இருக்கலாம். அவ்வாறு செய்யும் போது இந்திய அணியின் மீது குற்றச்சாட்டுகள் வராமல் இருந்து இருக்கும். ” என்றார் ராபின் உத்தப்பா.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles