இதெல்லாம் நியாயமே இல்ல சிஎஸ்கே.. இந்திய நாட்டை விட உங்க பிளேயர்ஸ் முக்கியமா போச்சுல்ல.. ராபின் உத்தப்பா விமர்சனம்

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணிலே இந்தியாவை ‘ஒயிட்வாஷ்’ செய்த முதல் அணி என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றது. இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்சுக் குரிய கிரிக்கெட் பயிற்சி மையத்தில், நியூசிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும் மற்றும் சென்னை வீரருமான ரச்சின் ரவீந்திரா பயிற்சி பெற்றுள்ளார்.

- Advertisement -

இதை குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “சென்னை அணியின் உரிமையாளர்கள் சென்னை வீரர்களை விட நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

- Advertisement -

நாட்டின் வீரர்களுக்கு முதலில் முன்னுரிமை அளியுங்கள்:

உத்தப்பா தனது யூடியூப் சேனலில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில் கூறியதாவது, “சென்னை வீரரான ரச்சின் ரவீந்திரா, சென்னை வந்து சிஎஸ்கே-வின் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் தனது பயிற்சியை மேற்கொண்டார். சிஎஸ்கே வீரர்களுக்கு அவர்களின் அணி என்பது ஒரு அழகான இடமாக திகழ்கிறது. சென்னை உரிமையாளர்கள் தங்களது வீரர்களை நன்றாக கவனித்துக் கொள்வார்கள், ஆனால் நாட்டின் நலம் கருதி ஒரு எல்லை இருக்க வேண்டும். சென்னை உரிமையாளர்கள், தங்களின் வீரர்களை விட நம் நாட்டின் வீரர்களையே மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர் ஒரு வெளிநாட்டு வீரர்; நம் நாட்டிற்கு எதிராக விளையாடக் கூடியவர்”.

- Advertisement -

மேலும் அவர், “சிஎஸ்கே எப்பொழுதும் தங்கள் வீரர்களுக்காக அக்கறை செலுத்துவது எனக்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால், அந்த இரக்கத்தில் ஏதேனும் சிறு தவறு கூட நடந்து விடக்கூடாது. நான் சிஎஸ்கேவை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் நம் நாட்டின் நலன் கருதி ஒரு எல்லை இருக்க வேண்டும். அந்த எல்லையை நாம் கடக்க கூடாது” என்று தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக சிஎஸ்கே-வின் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் ரச்சின் ரவீந்திரா கடுமையாக உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடினமான போட்டியை சந்திக்க தயாராகுவதற்காக, அவர் செம்மண் மற்றும் கருமண் ஆகிய இரு ஆடுகளத்திலும் பயிற்சி பெற்றார்.

- Advertisement -

இந்திய மண்ணில் நடந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் வரலாற்று வெற்றியில் சிறப்பாக செயல்பட்டவர்களில் ரவீந்திரரும் ஒருவர். அதற்காக, அவர் பிளாக்கேப்ஸ் என்ற அங்கீகாரத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles