என் முழு கிரிக்கெட் வாழ்க்கையில கம்பீர் மாதிரி ஒரு கோச்சை பார்த்ததே இல்லை – ராபின் உத்தப்பா ஆதங்கம்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா பயிற்சியாளர் கௌதம் கம்பீரை விமர்சித்து சில கருத்துக்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

முதல் போட்டியில் 4 ரன்னில் வெளியேறிய துணைக்கு கேப்டன் சுப்மான் கில் இரண்டாவது போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறி இருக்கிறார். மேலும் அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கடந்த 15 இன்னிங்ஸ்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ருத்ராஜ் என திறமையான வீரர்கள் இருக்கும்போது தனக்கு சாதகமான வீரர்களை மட்டுமே பயன்படுத்தி இப்படி ஒரு கோச்சை நான் பார்த்ததே இல்லை என்று ராபின் உத்தப்பா கம்பீரை விமர்சித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “என்னுடைய முழு கிரிக்கெட் வாழ்க்கையிலும் ஒரு ஹெட் கோச் தன் விருப்பப்படி வீரர்களை தேர்வு செய்வதை நான் பார்த்தது இல்லை. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மற்றும் மனக்கசப்புகளை அடிப்படையாக வைத்து உண்மையான திறமையை புறக்கணித்து விட்டு இந்திய அணியை தேர்வு செய்வது சரியல்ல” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles