கிட்டத்தட்ட 30 நாள்தான் இருக்கு.. தயவு செஞ்சு இப்போ பும்ரா விஷயத்தில் கவனமா இருங்க – ராபின் உத்தப்பா எச்சரிக்கை

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா மூன்றாவது போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து விலகிய நிலையில் தற்போது மீண்டும் இந்திய அணியில் இணைந்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ராபின் உத்தப்பா இது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் மேட்ச் வின்னர் பௌலராக பார்க்கப்படும் பும்ராவை இந்திய நிர்வாகம் முக்கியமான தொடர்களில் மட்டும் சுழற்சி முறையில் பயன்படுத்தி வருகிறது. அவரது பவுலிங் ஆக்சனை கருத்தில் கொண்டு எளிதில் காயமாக அதிக வாய்ப்புகள் இருப்பதால் அவரை முக்கிய தொடர்களில் மட்டுமே பயன்படுத்த இந்திய கிரிக்கெட் நிர்வாக முடிவு செய்திருக்கும் நிலையில் அதனையே வலியுறுத்தி ராபின் உத்தப்பா பேசியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “பும்ராவை இந்திய அணி மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். ஏனென்றால் அவரது பவுலிங் ஆக்சன் மற்ற வீரர்களை காட்டிலும் வித்தியாசமானது. இதனால் அவருக்கு எளிதில் காயமாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் அடுத்த டி20 உலக கோப்பைக்கு இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே எஞ்சி இருப்பதால் அவரை கவனமுடன் இந்திய நிர்வாகம் கையாள வேண்டும். அவரது பணி சுமையை கருத்தில் கொண்டு விளையாட அனுமதித்தால் மட்டுமே டி20 உலக கோப்பைக்கு அவர் முழு வீச்சில் தயாராகுவார்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles