வைபவ் சூர்யவன்சிகிட்ட அந்த ஒரு விஷயத்தை சொன்னேன்.. பையன் அத வச்சு சிஎஸ்கேவ வெளுத்து கட்டிட்டான் – ரியான் பராக் பேச்சு

தன் அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்சிக்கு கேப்டனாக தான் என்ன அறிவுரை கூறினேன் என்பது குறித்து ரியான் பராக் பேசியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று வைபவ் சூரியவன்சி சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்தில் அதிரடியாக அரைசதம் அடித்தார். மொத்தம் 17 பந்துகளை சந்தித்து விளையாடிய அவர் 52 ரன்கள் எடுத்தார். பவர் பிளேவிலேயே எந்த வித கஷ்டமும் இல்லாமல் போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வென்று கொடுத்தார்.

- Advertisement -

இதுகுறித்து கேப்டன் ரியான் பராக் பேசும் பொழுது “நான் வைபவ் சூரியவன்சியிடம் நீ மொத்தமாக 14 போட்டிகள் முழுமையாக விளையாட போகிறாய் எனவே வெளியில் யார் என்ன சொன்னாலும் அதை கண்டு கொள்ளாதே, ஏனென்றால் அந்த விஷயங்கள் உன்னை பாதிக்கவே கூடாது என்று சொன்னேன்”

- Advertisement -

“மேலும் அந்தப் பையனுக்கு பேட்டிங் செய்வது மிகவும் பிடிக்கும். இதன் காரணமாக பயிற்சியில் அவன் விரும்பும் வரை பேட்டிங் செய்வதற்கு வசதிகள் செய்து தருமாறு பயிற்சியாளர்களிடம் கூறியிருந்தேன். இந்த பையன் அற்புதமான திறமை படைத்தவன்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles