ரிஷப் பண்ட் சாம்பியன்ஸ் ட்ராபியிலும் விளையாடமாட்டார்… அதற்கு இந்த வீரர் தான் காரணம்… சஞ்சய் மஞ்சரேக்கர் விளக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் அமைந்துள்ள பாராபட்டி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி காயமடைந்த நிலையில் அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறக்கப்பட்டார். மேலும் சமீப காலமாக இந்தியாவின் ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் கேஎல் ராகுல் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரிலும் இடம்பெற்றார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இங்கிலாந்து மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் இந்தியாவின் ஆடும் லெவனில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இந்நிலையில் வர இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு கிடைக்காது என இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக தொலைக்காட்சி பேட்டியில் பேசிய, அவர் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதால் ரிஷப் பண்ட் இந்திய அணியின் பிளேயிங் லெவலில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியில் ஐந்தாவது வீரராக களமிறங்கிய அக்சர் பட்டேல் பேட்டிங்கில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் கில்லுடன் இணைந்து 108 ரன்கள் சேர்த்ததோடு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது மூன்றாவது அரை சதத்தையும் பதிவு செய்தார் என குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சுழற் பந்துவீச்சை சமாளித்து விளையாடுவது சமீப காலமாக மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. கடந்த போட்டியில் ஐந்தாவது வீரராக களமிறங்கிய அக்சர் பட்டேல் சுழற் பந்துவீச்சை மிகச் சிறப்பாக விளையாடியதோடு பேட்ஸ்மென்களுக்கே உரிய பொறுப்புணர்வுடன் விளையாடினார். டெஸ்ட் போட்டிகளில் அவர் பேட்டிங்கில் மிகச்சிறப்பாக செயல்படுவதை பார்த்திருக்கிறோம். அதனை தற்போது ஒரு நாள் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார் என தெரிவித்தார்.

- Advertisement -

இதன் காரணமாக வர இருக்கும் சாம்பியன் டிராபி தொடரிலும் அக்சர் பட்டேல் இந்திய அணியின் நடு வரிசையில் பேட்டிங் செய்வார் எனவும் மஞ்சரேக்கர் தெரிவித்தார். அக்சர் பட்டேல் சுழற்பந்து வீச்சை மிகச் சிறப்பாக விளையாடுகிறார். மேலும் சாம்பியன் டிராபி ஆசியாவில் நடைபெறுவதால் ஆடுகளங்கள் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்த சூழலில் அக்சர் பட்டேல் நடு வரிசையில் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமான ஒன்றாக அமைந்திருக்கிறது. எனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ரிஷப் பண்டிற்கு பதிலாக அக்சர் பட்டேலை விளையாட வைக்கவே இந்திய நிர்வாகமும் விரும்பும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles