நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் துவக்க வீரராக களம் இறங்கியது ஏன் என்பது குறித்து கூறியிருக்கிறார்.
கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு மார்க்ரம் மற்றும் மிச்சல் மார்ஸ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார்கள். இந்த நிலையில் அந்த தொடக்க ஜோடியை ரிஷப் பண்ட் மாற்றி தானே வந்தது விமர்சனமாக மாறி உள்ளது.
இது குறித்து ரிஷப் பண்ட் பேசும் பொழுது “எதிரணியில் இடதுகை ஸ்பின்னர் அக்சர் படேல் பவர் பிளேவில் பந்து வீச வராமல் இருக்கவும், அப்படி வந்தால் அவரை தாக்கி விளையாடவும் நான் துவக்க வீரராக வந்தேன். ஆனால் அவர் வருவதற்கு முன்பாகவே நான் அவுட் ஆகி விட்டேன்”
“இந்த ஆடுகளத்தில் 140 ரன்னை வைத்துக் கொண்டு வெல்ல முடியாது. கூடுதலாக இன்னும் 20 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி பெறுவதற்கு ஒரு வாய்ப்பு உருவாகி இருக்கும். நாங்கள் தவற விட்டு விட்டோம்” என்று கூறி இருக்கிறார்.

