2026 டி20 உலக கோப்பை.. இந்த நாலு பேர்தான் செமி ஃபைனல் வருவாங்க.. இந்த சின்ன டீமும் வரும் – ரிஷப் பண்ட் கணிப்பு

இந்திய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்த முறை டி20 உலக கோப்பை தொடருக்கு எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்? என்பது குறித்து தனது கருத்தை கூறியிருக்கிறார். அதில் அவர் ஆசியாவில் இருந்து தேர்ந்தெடுத்து இருக்கும் அணி ஆச்சரியப்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டன் ரோகித் சர்மா காயத்திலிருந்து திரும்பி வந்த ரிஷப் பண்டை நேரடியாக இந்திய அணியில் சேர்த்தார். ஆனால் அவர் பேட்டிங்கில் பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை. இந்த முறை அவரை நேரடியாக இந்திய டி20 அணியில் இருந்து கழட்டிவிட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ரிஷப் பண்ட் இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெறும் முதல் அணியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இதற்கு அடுத்து கடந்த முறை அரையிறுதிக்கு வந்து ஆச்சரியப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இந்த முறை மிகவும் வலிமையற்று காணப்படும் ஆஸ்திரேலியா அணியை மூன்றாவது அணியாக தேர்வு செய்திருக்கிறார். நான்காவது அணியாக கடந்த முறை டி20 உலக கோப்பை தொடருக்கு இறுதி போட்டிக்கு வந்த தென் ஆப்பிரிக்கா அணியை தேர்வு செய்து இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles