தோனி பையா மாதிரி வந்திருக்க பையன்.. என்ன மாதிரி ஒரு அடி மிரண்டு போயிட்டேன் – ரிஷப் பண்ட் பேச்சு

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக லக்னோ அணியின் இந்திய உள்நாட்டு இளம் வீரர் முகுல் சவுத்ரி அதிரடி அரைசதம் அடித்து வெற்றி பெற வைத்தார். இவர் குறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் லக்னோ 7 விக்கெட்டுகளை 16 ஓவர்களில் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. முகுல் சவுத்ரிக்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு வேறு எந்த பேட்ஸ்மேனும் களத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் தான் கடைசி நான்கு ஓவர்களுக்கு 54 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தனி ஒருவராக நின்று ஏழு சிக்ஸர்கள் அடித்து போட்டியை வெற்றி பெற்று கொடுத்தார். இவரும் தோனியைப் போலவே ராஜஸ்தானில் ஒரு சிறிய நகரத்திலிருந்து வரக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது குறித்து ரிஷப் பண்ட் பேசும்போது “நெட்சில் செய்யக்கூடியதை மேட்ச்சில் செய்த இவரை பற்றி பேசுவதற்கு எனக்கு வார்த்தைகளே வரவில்லை. நான் இவரது ஆட்டத்தில் மூழ்கி போய் விட்டேன். சிறிய நகரத்தில் இருந்து வந்து சாதிப்பவர்களை கவனிக்கிறேன். கேப்டனும் அணி நிர்வாகமும் கொடுக்கும் நம்பிக்கை இவர்களைப் பெரிய அதிசயங்களை செய்ய வைக்கும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles