ரிஷப் பண்ட் காலில் அடித்த பந்து.. கண்ணீருடன் ஆம்புலன்ஸில் சென்ற ஸ்பைடி.. நாளை பேட்டிங் செய்ய களமிறங்குவாரா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் சாய் சுதர்சன் 61 ரன்களையும், ஜெய்ஸ்வால் 58 ரன்களையும் சேர்த்தனர். தற்போது ஷர்துல் தாக்கூர் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

- Advertisement -

ரிஷப் பண்ட் காயம்

இந்த பிட்சில் 400 ரன்களுக்கு மேல் இந்திய அணி குவித்தால் மட்டுமே இங்கிலாந்து அணியை சமாளிக்க முடியும். அது இந்திய வீரர் ரிஷப் பண்ட் கைகளில் மட்டுமே உள்ளது. ஏனென்றால் முதல் நாளின் போது 37 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த ரிஷப் பண்ட், காலில் பந்து அடித்து உடனடியாக ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார். அவரின் கால்களில் இருந்து ரத்தம் வழிய தொடங்கியது. 

- Advertisement -

அதேபோல் வீக்கமும் அதிகளவு காணப்படுகிறது. நடக்கவே முடியாததால், அவர் ஆம்புலன்ஸில் வைத்து அழைத்து செல்லப்பட்டார். அவரின் வீக்கம் குறைந்தால் மட்டுமே ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வர முடியும். இல்லையென்றால், இந்திய அணி டெய்லண்டர்களுடன் போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும். இதனால் இந்திய அணி ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

- Advertisement -

நாளை விளையாடுவாரா?

கடந்த போட்டியின் போதே ரிஷப் பண்ட் கைகளில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் 9 நாட்கள் இடைவெளி இருந்ததால், குணமடைந்து மீண்டு வந்தார். ஆனால் இந்த காயம் உடனடியாக மீண்டு வருவாரா என்பது சந்தேகம் தான். தலையில் பந்து அடிக்கவில்லை என்பதால், மாற்று வீரர் கொண்டு வர முடியாது. இதனால் நாளைய ஆட்டத்தில் ரிஷப் பண்ட் வருவாரா என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. 

அதேபோல் ரிஷப் பண்ட் வெளியேறிய பின் வாஷிங்டன் சுந்தர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் ஷர்துல் தாகூர் களமிறக்கப்பட்டார். அவரும் அதிரடியாக 19 ரன்களை எடுத்து களத்தில் இருக்கிறார். இங்கிலாந்து மண்ணில் ஏற்கனவே 3 அரைசதங்களை அடித்துள்ளார் என்பதால், 2வது நாளில் இன்னும் கூடுதலாக ரன்களை சேர்ப்பார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles