இந்தியா – தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், இந்திய கேப்டன் ரிஷப் பண்ட் அடுத்தடுத்த 3 பந்துகளில் பலத்த அடி வாங்கி வலி தாங்க முடியாமல் களத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
நவம்பர் 14ஆம் தேதி துவங்கவுள்ள இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. உலக சாம்பியன்ஸ் அணியை இந்தத் தொடரில் வீழ்த்தி இந்த ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழையும் கட்டாயத்தில் இந்திய அணியும் பயிற்சியாளர் கம்பீரும் தீவிரமாக உள்ளனர்.
இந்த நிலையில் ஏ அணியுடனான ஆட்டத்தில் முக்கிய வீரர் ரிஷப் பண்ட் கையில் காயமடைந்தால், கையை மடக்க முடியாமல் களத்தை விட்டு வெளியேறி இருப்பது அணிக்கு சற்று பின்னடைவு.
ஏற்கனவே அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயமடைந்தால், வெஸ்ட் இண்டீஸ் அணியுடான தொடரில் இருந்து விலகின. தற்போது தென்னாப்பிரிக்கா தொடரில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் காயத்திற்கு உள்ளானார். அவரின் காயம் எந்த அளவு என்பது பொறுத்து தான் அவர் தென்னாபிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இருப்பாரா இல்லையா என்பது தெரிய வரும்.

