இன்று ஐபிஎல் தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் 50 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து தனது அணியை தனியாளாக வெற்றி பெற வைத்தார்.
கடந்தாண்டு ஐபிஎல் தொடர் அவருக்கு மிகவும் மோசமானதாக அமைந்தது. இந்த நிலையில் பேட்டிங் வரிசையில் மேலே வந்து தற்போது விளையாடி வருகிறார். இந்த நிலையில் இன்றைய போட்டியில் தனி ஆளாக வெற்றி பெற வைத்தது அவருடைய நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இது குறித்து பேசி உள்ள ரிஷப் பண்ட் கூறும்போது “முடிவுகள் நல்ல விதமாக வரும் பொழுது நல்லவிதமாகவே பேச்சுகளும் வரும். இது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். நாங்கள் விமர்சனங்களை எடுத்துக் கொள்ளக்கூடிய அணியாக இருக்கிறோம். அதிலிருந்து முன்னேறி செல்ல விரும்புகிறோம்”
“நான் சிறப்பாக தயாராகி 200 சதவீதம் முயற்சி செய்கிறேன். நான் எந்த அளவிற்கு கடினமாக உழைக்கிறேன் என்பது என்னுடைய பணி மற்றும் பணி நிர்வாகத்திற்கு நன்றாக தெரியும். எனக்கு அதுதான் மிகவும் முக்கியமானது. இனி என்னுடைய பேட் பேசட்டும்; நான் பேச விரும்பவில்லை” என்று கூறி இருக்கிறார்.

