என் பேச்சைக் கேளு.. அபிஷேக் நீ இதை செஞ்சா மீண்டு வரலாம்.. உடனே இதை கைவிடு – ரிக்கி பாண்டிங் அறிவுரை

தற்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அவர் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் மூன்று போட்டிகளில் டக் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்தார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 10 பந்தில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மட்டுமே அவருடைய பாணியில் விளையாடி அரைசதம் அடித்திருந்தார். இந்த நிலையில் செமி பைனலில் இங்கிலாந்து அணிக்கு எதிராக என்ன செய்வார்? என்கின்ற கவலை உருவாகியுள்ளது.

- Advertisement -

அபிஷேக் ஷர்மா திறமையானவர் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் அவர் தற்போது எந்த மாதிரியான அணுகு முறையில் விளையாட வேண்டும் என்பதில்தான் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அபிஷேக் ஷர்மா என்ன செய்தால் சரியாக இருக்கும் என்பது குறித்து தனது அறிவுரையை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “சில நேரங்களில் வீரர்களுக்கு ரன்கள் எடுக்க முடியாத காலகட்டம் வரும். அப்பொழுது ஒவ்வொரு நாளும் வலை பயிற்சிக்கு சென்று மணிக்கணக்கான நேரங்கள் பேட்டிங் பயிற்சி செய்வது சரியானதாக இருக்காது. அவர்கள் புத்துணர்ச்சி பெறும் வகையில் அவர்களை சில நேரங்களில் வலைப் பயிற்சிக்கு வெளியே விட்டு விடுவது சரியானதாக இருக்கும். இந்த மாதிரியான நேரங்களில் பயிற்சிக்கு வந்து ஃபீல்டிங் மற்றும் கொஞ்சமாக பந்துவீச்சு பயிற்சி செய்து விட்டு பேட்டிங் பயிற்சியை முற்றிலுமாக தவிர்ப்பது அபிஷேக் ஷர்மாவுக்கு சரியானதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles