அடிச்சு சொல்றேன்.. இந்தியாவின் முக்கிய அஸ்திரமா ரெண்டு பிளேயர் இருக்காங்க.. தெ.ஆ ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம் – ரிக்கி பாண்டிங் உறுதி

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை மறுநாள் இரண்டாவது சுற்று போட்டிகள் ஆரம்பம் ஆகின்றன. இந்திய அணி இரண்டாவது சுற்று தனது முதல் போட்டியில் வலிமையான தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? யாருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது? என்பது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

தற்போது இரண்டு அணிகளுமே சிறந்த பேட்டிங் யூனிட்டை வைத்திருக்கின்றன. இந்திய அணியை விட நீளமான பேட்டிங் யூனிட் தென் ஆப்பிரிக்க அணியிடம் இருக்கிறது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணியை விட சிறந்த பவுலிங் யூனிட்டை இந்திய அணி வைத்திருப்பதுதான் வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “நான் தென் ஆப்பிரிக்க அணியின் பவுலிங் மோசமாக இருக்கிறது என்று சொல்லவில்லை. ஆனால் வித்தியாசமான பந்துவீச்சு முறை இந்தியாவில் இருக்கிறது. பும்ரா பவுலிங் செய்யும் முறை மிகவும் வித்தியாசமானது. மேலும் அவருடைய ரிஸ்ட் பொசிஷன் அற்புதமாக இருக்கும். பவர் பிளவில் கொடுக்கும் தாக்கத்தை மிடில் ஓவரிலும் அவரால் கொடுக்க முடியும். அதே சமயத்தில் அவர் கடைசி கட்ட ஓவர்களில் அசாதாரணமாக இருப்பார்”

- Advertisement -

“வருண் சக்கரவர்த்திக்கு மேட்ச் அப் கிடையாது. ரைட் லெப்ட் எந்த பேட்ஸ்மேன் நின்றாலும் அவர் மிகச் சிறந்த முறையில் பந்துவீசி அவர்களை கட்டுப்படுத்தி விடுவார். எனவே இந்த வகையில் பார்க்கும் பொழுது இந்திய அணியே முன்னிலையில் இருக்கிறது. எனவே அவர்கள் வெல்லவே வாய்ப்புகள் அதிகம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles