டி20 WCக்கு அவர நீக்கியது இந்திய அணியின் தரத்தைதான் காட்டுது.. இவங்கள பாத்தா எனக்கு வியப்பா இருக்கு – பாண்டிங் ஆச்சரியம்

டி20 உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணி கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட நிலையில் முன்பு துணை கேப்டன் ஆக செயல்பட்ட சுப்மான் கில் உலகக்கோப்பை அணியில் ஒரு வீரராக கூட இடம் பெறவில்லை. பெரும்பாலான முன்னாள் வீரர்கள் மத்தியில் இது ஆதரவை பெற்றாலும் ஒரு சில முன்னாள் வீரர்கள் மத்தியில் இது வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

மேலும் அடுத்ததாக நடைபெற உள்ள நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் பெயர் இடம் பெறவில்லை. மேலும் நியூசிலாந்து அணிக்கான தொடர் தான் டி20 உலக கோப்பையில் விளையாடும் இறுதி 11 பேர் அணியை இந்திய நிர்வாகம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரான ரிக்கி பாண்டிங் இது குறித்து தனது வியப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “கடைசியாக கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடியதை பார்த்தேன். அப்படிப்பட்ட ஒரு வீரர் இந்திய டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அதுவே இந்திய கிரிக்கெட்டின் ஆழத்தையும் காட்டுகிறது. கில் போன்ற ஒரு வீரர் உலகக்கோப்பை அணியில் இடம் பெறவில்லை என்றாலும் இந்திய அணியில் எவ்வளவு திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. நாடு முழுக்க இந்திய அணி ஆழமான வீரர்களை கொண்டு செயல்படுகிறது அதனால் தான் ஒவ்வொரு ஐசிசி தொடரிலும் அவர்கள் டாப் இடத்தில் வருகிறார்கள்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles