இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் நட்சத்திர ஆட்டக்காரருமான சூரிய குமார் யாதவ் தற்போது டி20 போட்டிகளில் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். கடைசி 25 போட்டிகளில் அவரால் பெரிய பங்களிப்பை அளிக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் டி20 உலக கோப்பை மிகவும் நெருக்கமாக இருப்பதால் அவரது பேட்டிங் ஃபார்ம் இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது.
இருப்பினும் அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடுவதால் அவரது பார்ம் அவுட் வெளியே தெரிவதில்லை. இந்த சூழ்நிலையில் அவர் மீண்டும் பார்முக்கு வர ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் சில முக்கிய ஆலோசனைகள் கூறியிருக்கிறார்.
இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறும் போது “தற்போது இருக்கும் சூரிய குமாரை பார்த்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் அவர் மிகவும் திறமையான டி20 கிரிக்கெட் வீரர். தற்போது ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள 6 முதல் 10 பந்துகள் எடுப்பார். அதற்கு பிறகு அதிரடியாக விளையாடுவார். நான் சொல்வது ஒன்றுதான், இப்போது அவரை முழுவதுமாக அவர் நம்ப வேண்டும். டி20 கிரிக்கெட்டில் அவர் மிகவும் சிறந்தவர் என்று நிருபித்திருக்கிறார். எனவே அவரால் மீண்டும் அதை செய்ய முடியும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.

