கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இந்திய அணி டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இந்தத் தொடரில் மிகவும் வலுவாக களம் இறங்கிய இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது சூப்பர் 8 போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவியது. ஆனால் அதற்குப் பிறகு நடைபெற்ற அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது.
குறிப்பாக அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், இறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த சூழ்நிலையில் இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான ரிக்கி பாண்டிங் தற்போதைய இந்திய அணி தான் வரலாற்றிலேயே சிறந்த வலிமையான அணி என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “தற்போதைய இந்திய t20 அணி தான் வரலாற்றிலேயே சிறந்த t20 அணி. உலகத்தரம் வாய்ந்த பல மேட்ச் வின்னர்கள் இந்த அணியில் உள்ளனர். கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ஒரு நாள் மற்றும் டி20 என இரண்டிலும் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” என்று பேசி இருக்கிறார்.

