வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி மற்றும் ரோஹித்தின் ஃபார்ம் மிக மோசமான நிலையில் இருந்தது, இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ரோஹித் 6 இன்னிங்ஸ்களில் 91 ரன்களும், கோலி 6 இன்னிங்ஸ்களில் 93 ரன்களும் மட்டுமே எடுத்திருந்தன.
இதனைத் தொடர்ந்து, இருவரது ஃபார்ம்களும் கவலை அளிப்பதாக உள்ளது என்று, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கூறியிருந்தார்.
இக்கருத்தை குறித்து கம்பீரும், ரிக்கி பாண்டிக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தார்.
கம்பீரின் பதிலடி:
ஆஸ்திரேலியாவுக்குப் பறப்பதற்கு முன், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில், கோலி மற்றும் ரோஹித்தின் மோசமான ரன்களை பற்றியும் மற்றும் ஆஸ்திரேலியா வீரரான ரிக்கி பாண்டியின் கருத்துக்காகவும் பத்திரிக்கையாளர்கள் கம்பீரிடம் கேள்வி எழுப்பினர்.
உடனே கம்பீர், “பாண்டிங்கிற்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?. அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பற்றி மட்டும் யோசிக்க வேண்டும், இந்திய கிரிக்கெட் அல்ல” என்று சரமாரியாக பதிலளித்திருந்தார்.
விளக்கம் அளித்த, ரிக்கி பாண்டிங்;
இதற்குப் ரிக்கி பாண்டிங் நியூஸ் 7 ஒன்றில் இதற்கான பதிலை அளித்துள்ளார், “அவர் ‘கடுமையான குணம்’ கொண்ட நபர். எனவே, அவரின் இந்த பதிலுக்கு ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. மிக சிறிய விஷயங்கள் எவ்வாறு பெரிய சிக்கல்களாக மாறுகின்றன என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. கோலி ‘டாப் கிளாஸ்’ வீரர், மற்றும் கடந்த காலங்களில் ஆஸ்திரேலியா மண்ணில் மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளார்.”
விராட் கவலைப்படுவார், என்ன கருத்து:
மேலும் அவர் கூறுகையில், “நான் எந்த விதத்திலும் கோலியை ஏளனம் செய்யவில்லை, அது அவரை ஏளனம் செய்வதற்கான பதிவும் அல்ல. நான் அதைத் தொடர்ந்து சொன்னேன், அவர் ஆஸ்திரேலியாவில் நன்றாக விளையாடியுள்ளார், இங்கு மீண்டும் வலிமையாக முன்னேறுவார் என்று தான் கூறியுள்ளேன்.
நீங்கள் விராட்டை கேட்டுப் பாருங்கள், அவர் நிச்சயமாகவே அவரது ஃபார்மை குறித்து கவலைப்படுவார், கடந்த ஆண்டுகளில் எடுத்த நூறு ரன்களை, இந்த ஆண்டு என்னால் எடுக்க முடியவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டு தான் இருப்பார்” என்று கூறியுள்ளார்.

