இந்திய அணிக்கு கோச்சா வர்றீங்களா.? ரசிகரின் கேள்விக்கு கில்லஸ்பி கூறிய ஒரே வார்த்தை.. வைரலாகும் ட்வீட்

ஆஸ்திரேலிய முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜேசன் கில்லஸ்பி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில் அது குறித்து சமூக வலைதளங்களில் கில்லெஸ் பி உரையாடிய போது ரசிகர் ஒருவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருகிறார்களா? என்று கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ஜேசன் கில்லஸ்பி கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அப்போது தான் பயிற்சியாளராக இருந்த சமயத்தில் தனது துணை பயிற்சியாளரை அனுமதியின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கியதாகவும் மேலும் தன்னை பல முறை அவமதித்ததாகவும் கூறி தனது பதவியை தாமாக முன்வந்து ராஜினாமா செய்ததாகக் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் அணியில் அவரது பதவி காலம் சுமார் 8 மாதங்கள் மட்டுமே இருந்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சமூக வலைதளத்தில் அது குறித்து உரையாடிய கில்லஸ்பி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் இந்திய அணியின் பயிற்சியாளராக வருகிறார்களா? என்று கேட்டதற்கு அவர் ஒரே வரியில் ‘நோ தேங்க்ஸ்’ என்று பதில் அளித்தார். கம்பீரின் தலைமையில் தற்போது இந்திய டெஸ்ட் அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் ரசிகர் ஒருவர் இவ்வாறு கேட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles