2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் யுஎஸ்ஏ அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி தனது வழக்கமான அதிரடி பேட்டிங் அணுகுமுறையை வெளிப்படுத்தி 77 ரன்னுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதற்கு அடுத்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் ஆரம்பத்தில் பொறுமை காட்டி பின்பு அதிரடியாக விளையாடிய 49 பந்தில் 84 ரன்கள் குவிக்க இந்திய அணி தப்பித்து வென்றது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் லெஜன்ட் சுனில் கவாஸ்கர் ஆகியோர் ஆரம்பத்தில் அதிரடி காட்டினாலும் விக்கெட்டுகள் விழும் பொழுது பொறுமை காட்டி விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். பொதுவாக இரு நாடுகளுக்கு இடையேயான டி20 தொடர்களுக்கு பேட்டிங் செய்வதற்கு அதிக சாதகம் உள்ள ஆடுகளங்கள் கொடுக்கப்படுகிறது. ஆனால் உலகக்கோப்பை என்று வரும் பொழுது ஐசிசி இதுவரையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை இரண்டுக்கும் சமநிலையாக இருக்கும்படி ஆடுகளத்தை அமைத்து வருகிறது. எனவே ஒரு அணை தொடர்ந்து அதிரடியான முறையில் பேட்டிங் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கம்பீர் இந்த உண்மையை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், எனவே இந்திய t20 அணியின் பேட்டி யூனிட்டின் அதிரடியான அணுகுமுறையை மாற்றிக்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது. இதன்படி பேட்டிங் யூனிட்டில் முதல் நான்கு வீரர்கள் அதிரடியில் ஈடுபடுவார்கள் என்றும், இதற்கு அடுத்து வரும் நான்கு வீரர்கள் சூழ்நிலைக்கு ஏற்றது போல விளையாடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த வகையில் இந்திய அணி விளையாடினால் நிச்சயம் உலகக்கோப்பையை வென்று விடும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

