இனி கம்பீருக்கு பதிலா இவர்தான் கோச்சா.? இந்திய அணிக்கு திடீரென வந்த புதிய பொறுப்பு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் களமிறங்க உள்ள நிலையில், அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் கவுதம் கம்பீர் இந்தத் தொடரில் அணியுடன் செல்லாத நிலையில், அவருக்கு பதிலாக முன்னாள் இந்திய வீரரும், பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் இயக்குநருமான விவிஎஸ் லக்ஷ்மண் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார்.

- Advertisement -

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற உள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி சிறப்பாக விளையாடும் நோக்கத்தில் களமிறங்குகிறது. குறிப்பாக, கடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய அணிக்கு லக்ஷ்மண்தான் பயிற்சியாளராக இருந்தார். அந்த தொடரில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்ற நிலையில், தற்போது மீண்டும் அவரிடமே பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களை வைத்து உருவாக்கப்படும் அணியுடன் பணியாற்றிய அனுபவமும் லக்ஷ்மணுக்கு இருப்பதால், இந்த பொறுப்புக்கு அவர் சரியான தேர்வாக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

இதற்கிடையில், இந்திய ஆண்கள் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார். இந்திய அணி செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறது. தற்போது கம்பீர் இல்லாத நிலையில் மீண்டும் லக்ஷ்மண் பொறுப்பேற்றிருப்பதால், கடந்த முறை போலவே இந்த முறையும் இந்திய அணிக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுக்க முடியுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles