காயத்தால் வெளியேறிய ரோகித் சர்மா.. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா.? வெளியான அப்டேட்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்காக அமெரிக்காவில் செயற்கையாக அமைக்கப்பட்ட நியூயார்க் ஆடுகளம் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

- Advertisement -

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய ரோகித் சர்மா அடுத்த போட்டியில் களமிறங்குவாரா? என்பது குறித்த தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.

- Advertisement -

நியூயார்க் ஆடுகளத்தில் வேக பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ள நிலையில் பந்து பேட்ஸ்மேன்களுக்கு கணிக்க முடியாதபடி வருவதால் பேட்ஸ்மேன்கள் காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட் பொருத்தவரை ரன்கள் அதிகமாக சென்றால்தான் அது பார்ப்பவர்களுக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய விருந்தாக அமையும்.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் பார்த்துவிட்டு உலகக் கோப்பையை காணும் ரசிகர்களுக்கு இந்தத் தொடர் சலிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் உலகக் கோப்பை டி20 போட்டியில் இலங்கை அணி 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியும் 16 வது ஓவரில் தான் வெற்றி இலக்கை அடைந்தது.

நேற்று நடைபெற்ற அயர்லாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையான போட்டியிலும் அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 12 வது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது. இதில் இந்திய அணி வீரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். குறிப்பாக பல வீரர்கள் இந்த போட்டியில் பேட்டிங் செய்யும்போது காயமடைந்தனர். அயர்லாந்து வீரர் டாக்டேர் பும்ரா வீசிய பந்தை எதிர்கொண்ட போது பந்து முதலில் கையில் பட்டு பின்னர் ஹெல்மட்டை தாக்கியது. அதேபோல ரோஹித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பந்து தோள்பட்டையை தாக்கியது.

- Advertisement -

இதனால் ரோஹித் சர்மா அரை சதம் அடித்திருந்த நிலையில் தோள்பட்டை வலி காரணமாக மைதானத்தை விட்டு பாதியிலேயே வெளியேறினார். இதனால் அவரது காயம் குறித்த நிலை என்ன? அடுத்த போட்டியில் களமிறங்குவாரா? என்பது போன்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல் தகுதி குறித்த கருத்துக்கள் வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க:ரிஷப் பண்ட் நம்பர் 3 வரிசையில் களமிறங்க காரணமே இதுதான்.. இந்த ஆடுகளம் குறித்து எங்களுக்கு முன்னரே தெரியும்.. பயிற்சியாளர் பேட்டி

ரோகித் சர்மாவுக்கு தற்போது தோள் பட்டையில் சிறிதளவிலான காயமே ஏற்பட்டுள்ளதாகவும், அவர் உடல்நிலை நன்றாக தேறியிருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் நிச்சயமாக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் நியூயார்க் ஆடுகளத்தையும் ரசிகர்கள் தற்போது குற்றம் சாட்டி வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles